ஓடும் பேருந்தில் உல்லாசம் - சிக்கிய பிரபல பெண் அரசியல்வாதி - பெரிய இடத்தின் தயவால் எஸ்கேப்..!


சமீப காலமாக படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் கோச் பேருந்துகளை நடமாடும் லாட்ஜாக மாற்றி விட்டனர் என்று தான் கூற வேண்டும். காரணம், தொடர்ந்து அது பற்றி வரும் தகவல்கள் தான்.

இந்த விஷயத்தில் அதிகமாக சிக்குவது கல்லூரி காதல் ஜோடிகள் தான். அவர்களின் எதிர்காலம் கருதி காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி விடுகின்றனர்.

ஆனால், இந்த விவகாரம் ஓய்ந்த பாடில்லை. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது.பிரபல பெண் அரசியல் வாதி ஒருவர் தனது ஆண் நபருடன் உல்லாசமாக இருந்த போது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

பெங்களூருவில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் பிரபல தனியார் பேருந்து ஒன்றில் இரவு நேரத்தில் அரங்கேறியுள்ளது இந்த அட்டூழியம். 

ஆண் நண்பருடன் போதையில் படுத்திருந்த அந்த பெண் அரசியல் வாதி அரைகுறை ஆடையுடன் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினரிடம் நான் யாரு தெரியுமா.? என்னோட பவர் என்னன்னு தெரியுமா.? என ஏக வசனம் பேசியுள்ளார்.

இதனால், கடுப்பான போலீசார் அவர்கள் இருவரையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். பெரிய இடத்தின் தயவால் மறுநாள் காலை காவல் நிலையத்தில் இருந்து எஸ்கேப் ஆகி வெளியே வந்துள்ளார் அவர். சமூக வலைதளங்களில் பெண்ணுரிமை பற்றி சர்ச்சையில் சிக்கிய அவர் இப்போது சில்லறைதனத்தில் சிக்கியிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் பேருந்தில் உல்லாசம் - சிக்கிய பிரபல பெண் அரசியல்வாதி - பெரிய இடத்தின் தயவால் எஸ்கேப்..! ஓடும் பேருந்தில் உல்லாசம் - சிக்கிய பிரபல பெண் அரசியல்வாதி - பெரிய இடத்தின் தயவால் எஸ்கேப்..! Reviewed by Tamizhakam on January 14, 2020 Rating: 5
Powered by Blogger.