விஜய்யுடன் சேர்ந்து நடிப்பீர்களா..? - மகேஷ் பாபு கூறிய அதிரடி பதில்..!


தமிழ் சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் விஜய். இவர் தற்போது தன்னுடைய 64வது படமான "மாஸ்டர்" படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். 

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நடிகர் விஜய்க்கு மவுசு உள்ளது. தெலுங்கு நடிகர்கள் பலரும் விஜய்யை பற்றி புகழ்ந்து பல பேட்டிகளில் பேசியுள்ளனர். 

நடிகர் மகேஷ் பாபு முருகதாஸ் கூட்டணியில் வெளியான "ஸ்டைபர்" படத்தின் புரொமோஷனின் போது ஏ.ஆர். முருகதாஸ் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க விஜய் ரெடியாக இருக்கிறார் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில் மகேஷ் பாபுவிடம், முருகதாஸ் சார் விஜய் உங்களுடன் சேர்ந்து நடிக்க தயார் என்று கூறியிருந்தார். நீங்கள் விஜய்யுடன் இணைந்து நடிக்க தயாரா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு, யார் சொன்னாங்க நான் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று. நல்ல இயக்குனர், நல்ல கதை வந்தால் விஜய்யுடன் இணைந்து நடிக்க நான் தயார் என கூறியுள்ளார்.

விஜய்யுடன் சேர்ந்து நடிப்பீர்களா..? - மகேஷ் பாபு கூறிய அதிரடி பதில்..! விஜய்யுடன் சேர்ந்து நடிப்பீர்களா..? - மகேஷ் பாபு கூறிய அதிரடி பதில்..! Reviewed by Tamizhakam on January 10, 2020 Rating: 5
Powered by Blogger.