மேடையில் அஜித்தை கடுமையாக தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்..! - என்ன காரணம்..?


தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். நேற்று நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் நடிகர் அஜித்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். 

அவர் கூறியதாவது, அஜித் கஷ்டப்பட்டு தான் வளர்ந்தார். ஆனால், அஜித்தை முதன்முதலில் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம். 

இப்போது, சோழா பொன்னுரங்கத்தின் நிலைமை என்னவென்று அவருக்கு தெரியுமா..? தற்போது அவர் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார். ஆனால், அஜித் அவரை கண்டுகொள்ளாமல் நடிகை ஸ்ரீதேவி கணவருக்கு அடுத்தடுத்த இரண்டு படங்களை கொடுத்திருகிறார். 

ஏனென்றால், போனி கபூர் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார் பாருங்க. என கூறியுள்ளார் அவர். 

அஜித் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை என தொடர்ந்து இரண்டு படங்களை ஒரே தயாரிப்பாளருக்கு நடித்து கொடுப்பது பற்றித்தான் அவர் இப்படி பேசியுள்ளார்.

அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கத்தின் நலனுக்காக அஜித்தை இப்படி விமர்சித்துள்ளார் கே.ராஜன்.
Advertisement

Share it with your Friends