"Single இல்லை , நான் Committed ஆகிவிட்டேன்.." - விவகாரத்திற்கு பிறகு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஒப்பன் டாக்


சமீபகாலமாக, சினிமா பிரபலங்கள் பலரும் விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களை வாழ்த்துவதற்குப் பதிலாக இன்னும் எத்தனை மாசத்திற்கு இது நீடிக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பும் நிலை உருவாகிவிட்டது. 

அதோடு, தனியார் தொலைக்காட்சி மூலமாக திருமணம் செய்து கொள்ளும் பலரும் தற்போது விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில், பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஊரே மெச்சும் அளவுக்கு தன்னுடைய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிசந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த வாழ்கை அவருக்கு நீடிக்கவில்லை. திருமணம் முடிந்த சில மாதங்களில் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு வந்தது இந்த ஜோடி.

விவாகரத்திற்கு பிறகு தான் நடித்த படமான "பவர் பாண்டி" படத்தில் "செல்வி.திவ்யதர்ஷினி" என தனது பெயரை போட்டுக்கொண்டார் அம்மணி. இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்போ நீங்க சிங்கிளா..? இல்லை கமிட் ஆகிட்டீங்களா..? என்ற கேள்விக்கு ஆம் நான் கமிட்டட் ஆகி விட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆம், நான் என்னுடைய வேலையில் எப்போதுமே கமிட்டாக தான் இருக்கிறேன். என்னுடைய வேலையை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Advertisement

Share it with your Friends