"குட்டி ஸ்டோரி" பாடல் கார்டூன் வீடியோவை பார்த்த பிறகு விஜய் கூறிய ஒரு வார்த்தை..!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காதலர் தினமான இன்று மாஸ்டர் படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி உள்ளது. 

தன்னை சுற்றி நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் பதில்அளிக்கும் வகையில் மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாட்டு அமைந்துள்ளது. இந்த பாடலை விஜய்யே பாடி உள்ளார். 

அதில் நான் ஒரு குட்டி கதை சொல்லப்போகிறேன். என்னா சொல்ல வர்றேன்னு கவனமா கேளுங்க என்று ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறார். என்னா இங்க்லீசு..? என கேட்கசும்மா கேளுங்க ப்ரோ.. வாழ்க்கை ரொம்ப சின்னது. எப்வும் சந்தோஷமாக இருங்க என்கிறார்.

இந்த லிரிக்கல் வீடியோவில் நடிகர் விஜய்யின் கார்ட்டூன் கேரக்டர் ஆடுவதும், பாடுவது, கார் ஓட்டுவதும் என ரசிகர்களை கவர்ந்தது. இந்த வீடியோவை, விஜய்யிடம் முதன் முறையாக விஜய்யிடம் காட்டியபோது கை கட்டி பார்த்த அவர், "சூப்பர்" என ஒரு வார்த்தையில் பாராட்டினாராம்.

இதனை படத்தின் துணை இயக்குனரும், கார்டூன் கேரக்டர் லிரிக் வீடியோவை உருவாக்கியவருமான லோகி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"குட்டி ஸ்டோரி" பாடல் கார்டூன் வீடியோவை பார்த்த பிறகு விஜய் கூறிய ஒரு வார்த்தை..! "குட்டி ஸ்டோரி" பாடல் கார்டூன் வீடியோவை பார்த்த பிறகு விஜய் கூறிய ஒரு வார்த்தை..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.