"உடம்ப மறைக்க துணி.., - அப்போ, வக்ரத்தை மறைக்க..?" - "தல" அஜித் வசனத்துடன் ரம்யா நம்பீசன் - வைரல் வீடியோ..!


இந்த காலகட்டத்தில் சமூகத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் விஷயம் என்னவென்றால் அது பெண்கள் சார்ந்த பிரச்சனை தான். நாள் தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. அதை நாமும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். 

இந்நிலையில், பெண்கள் சந்திக்கும் துன்பங்களை வெளிப்படுத்தும் குறும்படத்தை நடிகை ரம்யா நம்பீசன் இயக்கி, வெளியிட்டுள்ளார். 

"UNHIDE" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள தமிழ் குறும்படத்தை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், மலையாள நடிகை மஞ்சு வாரியர் போன்றோர் தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

ரம்யா நம்பீசனே நடித்து வெளியிட்டுள்ள இக்குறும்படத்தில், பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள், துன்பங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. காமத்திற்கு இலக்கணம் வகுத்த இந்த தேசத்தில் நிமிடத்திற்கு ஒரு பலாத்காரமா என்ற கேள்வியை முன் வைத்து "வாழு, வாழ விடு" என்ற அஜித்தின் வசனந்துடன் முடித்துள்ளார் ரம்யா நம்பீசன்.

குறும்படம் என்றாலும் இதில் கதை என்று எதுவும் இல்லை ஒரு முழுக்க முழுக்க வசனம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதோ அந்த வீடியோ,

"உடம்ப மறைக்க துணி.., - அப்போ, வக்ரத்தை மறைக்க..?" - "தல" அஜித் வசனத்துடன் ரம்யா நம்பீசன் - வைரல் வீடியோ..! "உடம்ப மறைக்க துணி.., - அப்போ, வக்ரத்தை மறைக்க..?" - "தல" அஜித் வசனத்துடன் ரம்யா நம்பீசன் - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on February 20, 2020 Rating: 5
Powered by Blogger.