அதுக்கு Like போட்டது ஒரு குத்தமா.? - படத்திலிருந்து இயக்குனரை தூக்கியடித்த ஒல்லி நடிகர்..! - அடக்கொடுமைய..!


ஒல்லி நடிகர் நடிப்பில் தீபாவளிக்கு கொளுத்தும் பொருள் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், தலைக்கு மேல் கட்டும் பட்டி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான அந்த  இயக்குனர் அதே ஹீரோவை வைத்து மீண்டும் ஒரு ராட்சசத்தன்மான பட  எடுத்து அதையும் ஹிட் ஆக்கினார்.

இந்த இயக்குனரை பிடித்து போய் அவருடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வந்தார் ஒல்லி நடிகர். இந்நிலையில், ஒல்லி நடிகரின் மாமனார் அரசியலுக்கு வருவதை எதிர்த்து சிலர் மீம்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த மாதிரியான மீம்களுக்கு இந்த இயக்குனர் லைக் செய்து கொண்டே இருந்துள்ளார்.

இதனை அறிந்த ஒல்லி நடிகர், என்னுடைய மாமனாரை எதிர்த்து மீம் வருது சரி, அதனை நீங்க லைக் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா..? என அந்த இயக்குனரை ஒரே கிக்கில் படத்தில் இருந்து தூக்கி விட்டார். பாதியில் நின்ற அந்த படத்தை டி-பதினாறு படத்தை இயக்கிய இளம் இயக்குனரை புக் செய்து மீதி படத்தை எடுக்க தொடங்கி விட்டாராம்.

மாமனார் மேல எம்புட்டு பாசம் பாத்திங்களா இந்த மனுஷனுக்கு என்று கண்களை துடைத்து கொள்கிறார்கள் நடிகரின் ரசிகர்கள். ஆனால், மறுபக்கம் Like போட்டது ஒரு குத்தமாய்யா..? என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் சிலாகித்து வருகிறார்கள்.
Advertisement

Share it with your Friends