குறைந்த பட வாய்ப்பு - பழைய காதலை புதுப்பிக்கும் கொழுக் மொழுக் நடிகை..!


பட வாய்புகள் இல்லாத காரணத்தினால் மீண்டும் தன்னுடைய பழைய காதலை புதுபிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் அந்தகொழுக் மொழுக் நடிகை. சினிமாவில் அறிமுகமான புதிதில் தன்னுடைய கொழு கொழு தேகத்தை தமிழ் ரசிகர்களை கட்டி போட்ட அம்மணி இப்போது உடல் எடை குறைத்து எலும்புக்கூடு போல ஆகி விட்டார்.

வயதானவர்கள் போல சதை எல்லாம்தொங்கி விட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து வரும் அவர் பட வாய்புகளை பெற தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமீப காலமாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார். ஆனால், பெரும்பாலனா ரசிகர்கள் அவரை திரும்பி கூட பார்பதாக இல்லை. ஒல்லியாக இருக்கும் நடிகைகள் நம்ம ஊரு ரசிகர்களுக்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை.

இது தெரியாத சில முன்னணி நடிகைகள் எப்படி ஃபிட்ஆகுறேன் பாரு என கூறிக்கொண்டு உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறி தன்னுடைய மார்கெட்டுக்கு தானாகவே வேட்டு வைத்துக்கொள்கிறார்கள்.

இந்நிலையில், தன்னுடைய முன்னாள் காதலரான அந்த சர்ச்சை நடிகருடனான காதலை மீண்டும் புதுப்பிக்கும் முடிவில் இருக்கிறாராம் அம்மணி. இதனால், மீண்டும் மீடியாவின் வெளிச்சம் நமக்கு கிடைக்கும் என நம்புகிறாராம். இதன் ஒரு முயற்சியாக, அந்த நடிகரை தன்னுடைய படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க வைத்தார். 

ஆனால், அம்மணியின் காதல் அழைப்புக்கு காது கொடுக்கும் நிலையில் அந்த சர்ச்சை நடிகர் இல்லையாம். விளையாட்டு பையனா இருந்தது எல்லாம் போதும் ஒழுங்கா வேலையை பார்ப்போம் என சமத்து பையனாக தன்னுடைய வேலையில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறாராம். இதனால், கடும் ஏமாற்றத்தில் இருக்கிறாராம் கொழுக் மொழுக்.

குறைந்த பட வாய்ப்பு - பழைய காதலை புதுப்பிக்கும் கொழுக் மொழுக் நடிகை..! குறைந்த பட வாய்ப்பு - பழைய காதலை புதுப்பிக்கும் கொழுக் மொழுக் நடிகை..! Reviewed by Tamizhakam on March 23, 2020 Rating: 5
Powered by Blogger.