"கோப்ரா" படப்பிடிப்பு தளத்தில் பயங்கர சண்டை போட்ட விக்ரம் - பதற்றமான படக்குழு..!


நடிகர் விக்ரம் தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தான் "கோப்ரா". இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து சமீபத்தில் ஒரு யு-டியுப் சேனலில் பேட்டிக்கொடுத்துள்ளார். இதில் பல சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார், குறிப்பாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இப்படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். 

ஒருநாள் படப்பிடிப்பில் இர்ஃபான் பதான் ஓய்வில் இருக்க, அப்போது ஒரு ரஷ்யா நாட்டினர் போல் ஒருவர் வந்து பதானை வம்பிற்கு இழுத்தாராம். இர்ஃபான் பதான் ஒரு கட்டத்தில் இந்த ரஷ்யாக்காரரை போக சொல்லுங்கள் என சத்தம் போட்டுள்ளார். 

இதனால், இருவரும் கடுமையாக சண்டை போட்டுள்ளனர். இதனால் படக்குழுவே பதறிபோய்விட்டதாம். ஆனால், பிறகு தான் தெரிந்ததாம், அது விக்ரம் தான் என்று. விக்ரமே பிறகு தன்னை பற்றி சொல்ல, அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி பதானும் குபீர் என சிரித்துவிட்டாராம்.

** ஏங்க.. பதான் நிஜாமாவே விக்ரமை உங்களுக்கு அடையாளம் தெரியலையா..? - இல்லை பட ப்ரோமொஷனுக்கு இப்படி அடிச்சு விடுறீங்களா..?

"கோப்ரா" படப்பிடிப்பு தளத்தில் பயங்கர சண்டை போட்ட விக்ரம் - பதற்றமான படக்குழு..! "கோப்ரா" படப்பிடிப்பு தளத்தில் பயங்கர சண்டை போட்ட விக்ரம் - பதற்றமான படக்குழு..! Reviewed by Tamizhakam on March 02, 2020 Rating: 5
Powered by Blogger.