"உன்னை நினைத்து" படத்தில் இருந்து விஜய் விலகியதற்கு இது தான் காரணம்..! - நீண்ட நாள் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்..!


தமிழ் சினிமாவில் விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தமிழில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் ‘உன்னை நினைத்து‘. 

இந்தப் படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். இந்தப் படம் சூர்யாவின் சினிமா கேரியரில் முக்கியமான படம் என்றே சொல்லலாம். இந்த படத்தில் சினேகா மற்றும் லைலா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருப்பார்கள். 

இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் தானாம். இவரிடம் கதை சொல்லி ஓகே பண்ணிவிட்டார் இயககுனர் விக்ரமன். படப்பிடிப்பும் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட சில பிரச்னையால் நடிகர் விஜய் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. 

உடனே அந்த படத்தில் நடிகர் சூர்யா நடித்தார். இந்நிலையில், இந்த படத்தில் விஜய் நடிக்காமல் போனதற்கு காரணம் என்ன என்று நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் முதன் முறையாக கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது, இதில் ‘விஜய் இயக்குனர் விக்ரமனிடம் சென்று ”சார் இனி இது போன்ற காதல் படங்கள் எனக்கு வேண்டாம், நான் என் பாதையை ஆக்‌ஷன் கதைகளுக்கு பாதைக்கு மாற்றவுள்ளேன்” என்று கூறி விலகியதாக ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

உன்னை நினைத்து படத்தில் விஜய் விலகிய பிறகு பிரஷாந்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்தது. அவரும் தாமதிக்கவே கடைசியாக தான் சூர்யா உள்ளே வந்தாராம்.

மேலும், நடிகர் விஜய் அந்த நேரத்தில் "தமிழன்" படத்தில்வக்கீல் வேடத்தில் நடிக்க கதை கேட்டு வைத்திருந்தார் எனவும், அந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்பதால் தான் உன்னை நினைத்து படத்தை அப்படியே விட்டுவிட்டு "தமிழன்" படத்தில் நடிக்க சென்று விட்டார் விஜய் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தினரிடம் உண்டு.

"உன்னை நினைத்து" படத்தில் இருந்து விஜய் விலகியதற்கு இது தான் காரணம்..! - நீண்ட நாள் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்..! "உன்னை நினைத்து" படத்தில் இருந்து விஜய் விலகியதற்கு இது தான் காரணம்..! - நீண்ட நாள் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்..! Reviewed by Tamizhakam on March 06, 2020 Rating: 5
Powered by Blogger.