"வாருங்கள் சகோதரா.." - பா.ரஞ்சித்தை அன்புடன் அழைக்கும் "திரௌபதி" இயக்குனர் மோகன் ஜி.! - எதற்கு தெரியுமா...?


இயக்குநர் மோகன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் திரௌபதி. பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் இப்படம் வெளியானது. 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நாடகக்காதல் விவகாரத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது திரௌபதி. சில அரசியல் கட்சி தலைவர்களையும் அட்டாக் செய்திருப்பதால் படத்தின் ட்ரெயிலர் வெளியானதுமே எதிர்ப்பும் கிளம்பிவிட்டது.

பரியேறும் பெருமாள், கன்னிமாடம், அசுரன் உள்ளிட்ட படங்களுக்கு எதிர்வினையாக இப்படம் பார்க்கப்படுகிறது. திரௌபதி படத்திற்கு மற்ற சில சமூகங்களை சேர்ந்தவர்களும் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன.

பெண்கள், தங்களுடைய பெண் குழந்தைகளுடன் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக திரையரங்குகளுக்கு வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.ஜே.எஸ்.கே கோபி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சகோதரர் பா.ரஞ்சித் அவர்களுக்கு. நீங்கள் திரெளபதி படத்தை பார்க்க வர வேண்டும். உங்களை திரெளபதி படம் பார்க்க வைக்க முயற்சிகள் செய்தேன். ஆனால், உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் டிவிட்டர் மூலமாக அழைப்பு விடுக்கிறேன். அனைவரும் சமம் என்ற அம்பேத்கர் அவர்களின் வார்த்தையை முன்னிருத்தி" என பா.ரஞ்சித்தை திரௌபதி படம் பார்க்க அழைத்துள்ளார்.


இதனை பார்த்த படத்தின் இயக்குனர் திரு.மோகன் ஜி அவர்கள் நானும் என்னுடைய சகோதரனை அழைக்கிறேன் என ஜே.எஸ்.கே.கோபியின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து பா.ரஞ்சித்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

"வாருங்கள் சகோதரா.." - பா.ரஞ்சித்தை அன்புடன் அழைக்கும் "திரௌபதி" இயக்குனர் மோகன் ஜி.! - எதற்கு தெரியுமா...? "வாருங்கள் சகோதரா.." - பா.ரஞ்சித்தை அன்புடன் அழைக்கும் "திரௌபதி" இயக்குனர் மோகன் ஜி.! - எதற்கு தெரியுமா...? Reviewed by Tamizhakam on March 02, 2020 Rating: 5
Powered by Blogger.