கிளாமர் போட்டோவா போட்டு தள்ளியது வீண் போகவில்லை - அடுத்த படமும் இவருடன்தான்..! - ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்..!


இசையமைப்பாளராக இருக்கும் போதே தனக்கென ரசிகர் வட்டத்தை பெற்றவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக வெற்றிக்கொடி நாட்டிய இவர் அதனை தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கினார். 

இவரது நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. நான், சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்தன. பின்னர் இவர் நடித்த அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. 

இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்கவுள்ளார் ஆத்மிகா. 

இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். டிடி ராஜா தயாரிக்கிறார். ஆள், மெட்ரோ உள்ளிட்ட படங்களை எடுத்த ஆனந்த கிருஷ்ணன் இந்த படத்தையும் இயக்குகிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வந்த படம் கொலைகாரன். 


தற்போது இவர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், தமிழரசன், காக்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மீசைய முறுக்கு படத்தில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதன் பிறகு காட்டேரி படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிப்பில் நரகாசூரன் படம் இன்னும் வெளியாகவில்லை. 

இதனால், சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். இந்நிலையில், இவருக்கு இந்தபடத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆக, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்த இவரது முயற்சி வீண் போகவில்லை என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

கிளாமர் போட்டோவா போட்டு தள்ளியது வீண் போகவில்லை - அடுத்த படமும் இவருடன்தான்..! - ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்..! கிளாமர் போட்டோவா போட்டு தள்ளியது வீண் போகவில்லை - அடுத்த படமும் இவருடன்தான்..! - ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்..! Reviewed by Tamizhakam on March 13, 2020 Rating: 5
Powered by Blogger.