என்ன ஆச்சு விஜய் ரசிகர்களுக்கு - அப்போ, Pre Annoucement இல்லன்னா அவ்ளோ தானா.?


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத் தட்ட முடிந்துவிட்ட நிலையில் அதன் ப்ரமோசன் வேலைகளிலும் ஒருபுறம் படக்குழு களமிறங்கியுள்ளது. 

இதனிடையே, கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி "குட்டி ஸ்டோரி" என்ற பாடல் வெளியானது. அதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இரண்டாவது பாடலான ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இதுஒரு பாடலைப் போல் அல்லாமல் தீம் இசையைப் போல் இருந்தது. 

இதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி மூன்று மணி நேரம் ஆகியும்ட்ரெண்ட் ஆகவே இல்லை.

அவ்வளவு ஏன்.. பாடலும் இப்போது வெளியாகி விட்டது. ஆனால், இன்னும் ட்ரெண்ட் ஆகவில்லை. இதனை பார்த்த பொதுவான ரசிகர்கள் என்ன ஆச்சு விஜய் ரசிகர்களுக்கு ..?  அப்போ, Pre Annoucement இல்லன்னா அவ்ளோ தானா.? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.--Advertisement--
Share it with your Friends