ஆண்களின் படுக்கை சுகத்திற்கும், இதற்கும் தான் பெண் ஒரு பொருளாக்கப்படுகிறாள்..! - அமலா பால் கருத்து..!


பொதுவாக சினிமா நடிகர்கள், நடிகைகள் அவ்வப்போது கருத்து கந்தசாமிகளாக மாறுவார்கள். அவர்கள் வாழ்கையில் நடந்த ஒரு விஷயத்தில் அவர்கள் கற்றுக்கொண்டது அல்லது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து கருத்து சொல்வது, அல்லது எதாவது ஒரு புத்தகத்தை படித்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து உரையாற்றுவது என இப்படி திடீர் திடீரென கருத்துகளை அள்ளி தெளிப்பார்கள்.

அந்த வகையில், சமீபகாலமாகவே வாழ்க்கைத் தத்துவங்களாக சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை அமலாபால். அதிலும் குறிப்பாக இரண்டாவது திருமணம் பற்றிய சர்ச்சைகளுக்குப் பிறகு ஆண்கள், பெண்கள் மனம் மற்றும் காதல் பற்றிய பதிவுகளை அதிகமாக அவரது பக்கத்தில் பார்க்க முடிகிறது. 

தற்போதும் அதே போன்றதொரு பதிவை அமலாபால் வெளியிட்டுள்ளார். ஓஷோவின் தி புக் ஆப் வுமன் என்ற புத்தகத்தின் புகைப்படத்தோடு, சமூகத்தில் பெண்களின் நிலை பற்றிய தனது ஆதங்கத்தை இந்தப் பதிவில் அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

அதில் அவர் கூறியுள்ளதாவது, 'ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும், கிட்டத்தட்ட ஒரு பெண்ணின் மரணம் தான். அந்த மரண பயம் தீருவதற்கு முன்பே மீண்டும் அவளை கர்ப்பமாக்கத் கணவன் தயாராக இருக்கிறான். 

மனிதர்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு தொழிற்கூடமாக பெண்ணின் உடல் அமைந்துவிட்டதோ என்று தோன்றுகின்றது. ஆண்கள் பெண்ணின் வலியில் பங்கேற்பதில்லை. ஆணின் படுக்கை சுகத்திற்கும், அவனுடைய பாலுணர்வுக்கு மட்டுமே பெண் ஒரு பொருளாக்கப்படுகிறாள். 

அதன் விளைவு குறித்து யோசிக்க ஆண் சிறிதும் கவலைப்படவில்லை. 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று சொல்லும் ஒரு ஆண் உண்மையில் அவளை நேசித்திருந்தால், உலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை? இங்கு 'காதல்' என்ற வார்த்தை அர்த்தமற்று உள்ளது. கிட்டத்தட்ட கால்நடைகளைப் போலவே பெண் நடத்தப்படுகிறாள்” என அமலாபால் வேதனையாக கூறியுள்ளார்.

ஆண்களின் படுக்கை சுகத்திற்கும், இதற்கும் தான் பெண் ஒரு பொருளாக்கப்படுகிறாள்..! - அமலா பால் கருத்து..! ஆண்களின் படுக்கை சுகத்திற்கும், இதற்கும் தான் பெண் ஒரு பொருளாக்கப்படுகிறாள்..! - அமலா பால் கருத்து..! Reviewed by Tamizhakam on April 29, 2020 Rating: 5
Powered by Blogger.