சுஷாந்த் சிங் குடும்பத்தில் மேலும் ஒரு மரணம் - கடும் வேதனையில் பாலிவுட் பிரபலங்களை விளாசும் ரசிகர்கள்..!


'எம்எஸ் தோனி' பட நாயகனான சுஷாந்த் சிங் ஞாயிற்றுக்கிழமையன்று மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆறு மாத காலமாக அவர் மன உளைச்சல் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

சுஷாந்தின் மறைவு சினிமா ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சுஷாந்த்தின் மரணம் தொடர்பான சர்ச்சைகளும் ஆரம்பமாகி உள்ளன. அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது மாமா கூறி வருகிறார்.

இதற்கிடையே சுஷாந்தின் உடல் நேற்று மும்பையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவருக்கு பாலிவுட் பிரபலங்களான ஷாரூக்கான், விவேக் ஓபுராய், ஸ்ரத்தா கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட ஒரு சில திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் சுஷாந்தின் அண்ணி சுதா தேவி என்பவர் நேற்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். சுஷாந்தின் மறைவுச் செய்தியைக் கேட்டதிலிருந்தே அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாராம். சுஷாந்த் அவரது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் மிகவும் பாசமாகப் பழகுவாராம்.

பீகார் மாநிலத்தில் புர்னியா மாவட்டத்தில் உள்ள பத்ர கோதி என்ற இடத்திற்கு அருகில் உள்ள மால்திஹாக என்ற கிராமம்தான் சுஷாந்த் குடும்பத்தாரின் பூர்வீக கிராமமாம். சில மாதங்களுக்கு முன்பு அங்கு நடந்த ஒரு குடும்ப நிகழ்வில் கூட சுஷாந்த் கலந்து கொண்டாராம்.

அவரது மறைவுச் செய்தி கேட்டு அந்தப் பகுதி மக்களும் அவர்கள் உறவினர்களிடம் தங்கள் இரங்கலைத் தெரிவித்தார்களாம். இதனிடையே டுவிட்டரில் இன்றும் சுஷாந்த் தற்கொலை பற்றி சில ஹிந்தி சினிமா பிரபலங்களைத் திட்டி ரசிகர்கள் பதிவிட்டு அதை டிரென்டிங் ஆக்கி வருகிறார்கள்.

சக நடிகர்  ஒருவர் இறந்துள்ளார். பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் கூட தெரிவிக்காமல் உள்ளனர். மேலும், சுஷாந்த் சின் உயிருடன் இருக்கும் போது பல நிகழ்சிகளில் அவரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டவர். சுஷாந்த் சிங் என ஒரு நடிகர் இருக்கிறாரா..? என்று கிண்டலாக கேட்ட நடிகைகள் என அனைவரையும் ட்ரெண்ட் செய்து விளாசி வருகிறார் அவரது ரசிகர்கள்.

சுஷாந்த் சிங் குடும்பத்தில் மேலும் ஒரு மரணம் - கடும் வேதனையில் பாலிவுட் பிரபலங்களை விளாசும் ரசிகர்கள்..! சுஷாந்த் சிங் குடும்பத்தில் மேலும் ஒரு மரணம் - கடும் வேதனையில் பாலிவுட் பிரபலங்களை விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 16, 2020 Rating: 5
Powered by Blogger.