முன்னணி இயக்குனரின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் டிக் டாக் நடிகை..! - ஹீரோ யாரு தெரியுமா..?


டப்ஸ்மாஷ் முதல் டிக் டாக் வரை அழகான முகபாவனைகளைக் காட்டி, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் மிர்ணாளினி ரவி. இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

இதன் காரணமாக சமூக வாலைதளங்களில் பல லைக்குகளை அள்ளியவர். தற்போது திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் அள்ளினார். ஆனால் இவர் "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். 

இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். அதன் பின் தெலுங்கு படமான வால்மீகி படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் நம்ம ஊரு ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் தெலுங்கு படம் என்பதால் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருந்தார். இந்நிலையில், அடுத்த தமிழ் படமாக முன்னணி இயக்குனர் பொன்ராம் இயக்கம் எம்.ஜி.ஆர். மகன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.


கொரோனாலாக் டவுன் காரணமாக படத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், சத்யராஜ் மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகிறார்கள்.

மேலும், சியான் விக்ரமின் கோப்ரா படத்திலும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார் மிர்ணாளினி என்பது குறிப்பிட தக்கது. 

முன்னணி இயக்குனரின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் டிக் டாக் நடிகை..! - ஹீரோ யாரு தெரியுமா..? முன்னணி இயக்குனரின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் டிக் டாக் நடிகை..! - ஹீரோ யாரு தெரியுமா..? Reviewed by Tamizhakam on August 10, 2020 Rating: 5
Powered by Blogger.