37 வயதில் அதற்கு ஓ.கே சொன்ன த்ரிஷா - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் கிட்ட தட்ட 20 ஆண்டு கடந்து விட்ட திரிஷா இன்றும் சூடான கேக் போல பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஆனால், சமீப காலமாக தனக்கு வரும் பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் தட்டி கழித்து வருகிறார்.
பொதுவாக நடிகைகள் வாய்ப்பு தேடி பலமுயற்சிகள் எடுப்பார்கள். ஆனால், அம்மணிக்கு அப்படியான வாய்ப்புகள் வாசல் கதவை தட்டிய போதும் ஒகே சொல்லாமல் தவிர்த்து வருகிறார். அதற்கு என்ன காரணம்..? என்ன ஆச்சு திரிஷாவுக்கு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நின்று போன திருமணம்
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருபவர், முன்னணி நடிகை த்ரிஷா.இப்போது தமிழ், மலையாளத்தில் நடித்து வரும் அவர் தனது திருமணம் பற்றி மீண்டும் கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியனை காதலித்தார் நடிகை த்ரிஷா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திடீரென திருமணம் நின்றுபோனது.
கருத்துவேறுபாடு காரணமாக நின்றுபோனதாக அப்போது கூறப்பட்டது. இது பரபரப்பாகப் பேசப்பட்டது.
சிம்புவுடன் கல்யாணமாமே...?
தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களாக இருக்கும் சிம்பு மற்றும் த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சிம்பு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது.
ஏற்கனவே பல காதல் சர்ச்சைகளை கடந்து வந்தவர்கள் சிம்பு மற்றும் திரிஷா இருவரும். இவர்கள் இருவரும் சில காதல் கிசுகிசுவில் ஆரம்பித்து பல விஷயங்களை அசால்டாக டீல் செய்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் நேற்று காட்டு தீ போல், சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில், அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்று சிம்புவின் தந்தை டி.ஆர் கூறினார்.
கல்யாணத்துக்கு ரெடி..!
தன்னுடைய திருமணம் நின்று போன பிறகு திருமணம் என்ற பேச்சையே எடுக்காமல் இருந்த திரிஷா தற்போது தன்னுடைய 37-வது வயதில் திருமணம் பற்றி வாய் திறந்துள்ளார்.
என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாகப் புரிந்து கொள்பவரை திருமணம் செய்து கொள்வேன்.
அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும்போது திருமணம் நடக்கும். கல்யாணம் செய்துகொள்ள நான் ரெடியாக இருக்கிறேன். அதுவரை, சிங்கிளாக இருப்பது பற்றி கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஒரு வழியாக 37 வயதில் திருமணத்துக்கு ஓ.கே சொன்னாரே என்று பெருமூச்சு விடுகிறார்கள் அவரது ரசிகர்கள். திருமணத்திற்கு தயார் ஆகி வருவதால் தான் புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருக்கிறார் திரிஷா என்கிறார்கள்.
2021 நடிகை திரிஷா திருமணம் செய்துகொள்ளும் ஆண்டாக இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
37 வயதில் அதற்கு ஓ.கே சொன்ன த்ரிஷா - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
December 26, 2020
Rating:
