நாக்கை நீட்டி டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த ஸ்ரீதிவ்யா..!


தெலுங்கில், 'ஹனுமான் ஜங்க்ஷன் ' என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இதை தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
 
இதை தொடர்ந்து தெலுங்கில், 'மனசார' என்கிற படத்தின் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டு நாயகியாக மாறினார். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தெலுங்கு மொழியை தொடர்ந்து தமிழ் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. 
 
அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்தார். 
 
இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கினார்.
 
ஆரம்பம் இவருக்கு அமோகமாக இருந்த போதிலும், இவர் கடந்த சில ஆண்டுகளாக நடித்த தமிழ் படங்கள் படு தோல்வியை தழுவியது. 
 
இதனால் இவருக்கு வந்த பட வாய்ப்புகளும் குறைய துவங்கியது. கடைசியாக இவர் நடிகர் ஜீவாவுடன் நடித்த 'சங்கிலி புங்கிலி கதவை தொர ' படம் தான் வெளியாகியது.
 
 
தற்போது அடுத்த ரவுண்டு ரெடியகியுள்ள ஸ்ரீதிவ்யா தற்போது அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த என்ற படத்திலும் மேலும், கௌதம் கார்த்திக் நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.


சமீப காலமாக, தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் அம்மணி. அந்த வகையில், மொட்டை மாடியில் டாப் ஆங்கிளில் நாக்கை நீட்டி குறும்புத்தனமான போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நாக்கை நீட்டி டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த ஸ்ரீதிவ்யா..! நாக்கை நீட்டி  டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த ஸ்ரீதிவ்யா..! Reviewed by Tamizhakam on December 13, 2020 Rating: 5
Powered by Blogger.