"இது தான் புது செக்ஸி.." - நடிகை வரலக்ஷ்மியின் பதிவு..!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள், வரலட்சுமி. இவர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து விக்ரம் வேதா மற்றும் தாரதப்பட்டை ஆகிய படங்களில் பெயர் சொல்லும் அளவுக்கு நடிப்பில் தாறுமாறு ஆக்கினார். கதாநாயகியாக நன்றாக சென்றிருந்த நேரத்தில், திடீரென வில்லியாக மாறினார்.
சர்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் வில்லியாக மிரட்டியிருப்பார். இதனையும் ரசிகர்கள் ரசித்தனர். தற்போது கன்னடத்தில் ரணம் எனும் படத்தில் நடித்துவருகிறார்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் படத்தின் படப்பிடிப்பு
மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் சண்டைக்காட்சி
ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு
பயன்படுத்தாமல், டூப் இல்லாமல் சண்டை போட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் வீரக்குமார் இயக்கத்தில் சேஸிங் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லர் அவதாரத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இது தான் புதிய கவர்ச்சி
தற்போது, கொரோனா உருமாற்றம் அடைந்து புதிய ரூபத்தில் பரவி வருகின்றது என்ற நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கதி கலங்கி போயுள்ளது.இந்நிலையில், "வலிமை" தான் புதிய கவர்ச்சி. வலிமையாக இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் என்ற ஒரு பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
"இது தான் புது செக்ஸி.." - நடிகை வரலக்ஷ்மியின் பதிவு..!
Reviewed by Tamizhakam
on
January 03, 2021
Rating:
