நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர். கே.பாலசந்தர் இயக்கிய
டூயட் படத்தில் தமிழுக்கு வந்த அவர் பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி
நடிகரானார். அதன்காரணமாக தென்னிந்திய சினிமாவில் புகழடைந்தார்.
தற்போது
மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக
போட்டியிட்டுள்ள அவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின்
வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் டெல்லியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில்,
டெல்லி பல்கலைகழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பினை தமிழ் மாணவர்கள்
தட்டிப்பறிப்பதாகவும், இதனால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக
கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இதனை மாற்றி டெல்லி மாணவர்களுக்கு அதிக
இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த
பேச்சுக்கு டெல்லியில் உள்ள தமிழ் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து
வருகிறார்கள்.
இந்த நிலையில், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்
ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் பிரச்சாரம் செய்து வரும் நடிகர்
பிரகாஷ்ராஜ், டெல்லி பல்கலைக்கழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ்
மாணவர்கள் பறிக்கிறார்கள். அதனால் டெல்லி மாணவர்கள் பாதுகாக்க வேண்டும்.
மேலும் நான் தமிழர் இல்லை கன்னடன் என்றும் பேசியுள்ளார்.
பிரகாஷ்ராஜின்
இந்த பேச்சு அங்குள்ள தமிழ மாணவர்களுக்கிடையே மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள்
மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகராக இருந்தும்
தமிழில் நடித்ததினால்தான் பிரகாஷ்ராஜ் பெரிய நடிகரானார். தன்னை வளர்த்து
விட்டது தமிழர்களாக இருந்தும் நன்றி இல்லாமல் பேசுகிறார் என்று பலரும் அவரை
விமர்சித்து வருகிறார்கள்.
அதையடுத்து டெல்லி தமிழ் மாணவர் சங்க
தலைவர் சரவண ராகுல் விடுத்துள்ள செய்தியில், நடிகர் பிரகாஷ்ராஜ், எந்த
மாணவர்களுக்கும் ஆதரவாக பேசாமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் அவரது இந்த
பேச்சு மாணவர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டுள்ளது. இதை
எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தனது கண்டனத்தை
வெளியிட்டுள்ளார்.



