Posts

Showing posts with the label Delhi Students

நான் தமிழன் இல்லை கன்னடன் - தமிழ் மாணவர்கள் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை பறிக்கிறார்கள்

Image
நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர். கே.பாலசந்தர் இயக்கிய டூயட் படத்தில் தமிழுக்கு வந்த அவர் பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். அதன்காரணமாக தென்னிந்திய சினிமாவில் புகழடைந்தார். தற்போது மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ள அவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் டெல்லியில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், டெல்லி பல்கலைகழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பினை தமிழ் மாணவர்கள் தட்டிப்பறிப்பதாகவும், இதனால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இதனை மாற்றி டெல்லி மாணவர்களுக்கு அதிக இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த பேச்சுக்கு டெல்லியில் உள்ள தமிழ் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் பிரச்சாரம் செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், டெல்லி பல்கலைக்கழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள் பறி...