தெறி, மெர்சல் என தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கால்பந்தாட்டம் தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, இந்துஜா, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
நாளை(ஜூன் 22) விஜய் பிறந்தநாள் என்பதால் இன்று(ஜூன் 21) மாலை 6மணியளவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். படத்திற்கு பிகில் என பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தமிழில் தாறு மாறு ஹிட் அடித்த படத்தின் காப்பி என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறிவருகிறார்கள். கூடவே அந்த புகைப்படத்தையும் ஷேர் செய்து வருகிறார்கள்.




