ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் பொசு பொசுவென இருந்த நடிகை ஹன்ஷிகா. அதன் பிறகு உடல் எடையை குறைத்தார். இதனால், பப்ளிமாஸ் நடிகை எப்படி, இந்த அளவுக்கு உடல் இளைத்து விட்டார் என்று ஜிம்னாஸ்டிக்கே கதியென்று கிடக்கும் நடிகைகள் ஆச்சரியத்துடன், அவரைப் பார்த்தனர்.
ஆனால், அப்படி ஸ்லிம்மாகியிருந்த ஹன்சிகா, இப்போது மேலும் ஒல்லியாகி எலும்புக்கூடு போல ஆகிவிட்டார். இது குறித்து, சிலர் ஹன்சிகாவிடம் கருத்து சொன்னதை அடுத்து, மீண்டும் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி டயட்ஸ் என்ற பெயரில் உண்ணாவிரதம் இருந்து வருகிறாராம்.
மேலும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சேர்த்து, அரை டஜன் படங்களுக்கு மேல் நடிக்கும் ஹன்சிகாவுக்கு, ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய கூட நேரமில்லையாம்.ஆனாலும், உடல் எடை குறைக்கிறேன் என்ற பெயரில் இப்படிஎலும்புக்கூடு போல மாறிவிட்டது கன்றாவியாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.





