பிகில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பிரபலங்கள் என்ன சொல்லியிருக்காங்க..? - வாங்க பாக்கலாம்


பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் உலகளவில் முதல் இரண்டு இடத்தில் #HBDEminentVijay மற்றும் #Bigil ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 

நாளை (ஜூன் 22) விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 'பிகில்' என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தின் போஸ்டரில் இரண்டு விஜய் இருப்பது போலவும், மீன் மார்க்கெட் பின்னணி கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதால், பலரும் கால்பந்து மைதானத்தை தான் பின்னணியில் எதிர்பார்த்தார்கள். யாரும், இது போன்ற பின்னணியில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்க்கவில்லை. 

படத்தின் போஸ்டர் வித்தியாசமாக இருந்ததால், பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து தங்களுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிரத் தொடங்கினார்கள். 

வாங்க பர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்து பிரபலங்கள் என்ன சொல்லி இருக்காங்க-னு பாக்கலாம்..!