"கடைசியில உங்களோட படத்திலிருந்தே காப்பி அடிச்சுட்டீங்களே அட்லி சார்.." - வைரலாகும் பிகில் புதிய போஸ்டர்


விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர் டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். 

தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே படத்தின் டிரைலரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் டிரைலர் வெளியாகவில்லை. இந்தப் படத்தின் டிரைலர் அக்டோபர் 4ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், ட்ரெய்லர் வெளியாகவில்லை. 

ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்த அப்டேப் எப்போது என ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு கேள்வி எழுப்பும் அளவிற்கு சென்றுவிட்டனர்.

தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இரண்டாவது வாரம் தணிக்கைக் குழுவுக்கு படம் அனுப்பட வேண்டும் என்பதால், அதற்காக முழு வீச்சில் படக்குழு பணியாற்றி வருகிறது. 

இந்நிலையில், பிகில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்தது. இந்நிலையில் இன்று பிகில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது. 

இதில் கிருத்துவ திருமண கோலத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா, விஜய்யை ஓரக் கண்ணால் பார்ப்பதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


இதனை பார்த்த ஒரு தரப்பு ரசிகர்கள் ஆஹா.. ஓஹோ.. தளபதி.. என்று சிலாகித்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு தரப்பு ரசிகர்கள் "அங்க அடிச்சி இங்க அடிச்சி கடைசியில உங்களோட படத்துல இருந்தே காப்பி அடிசுட்டீங்களே அட்லி சார்" என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

ராஜா ராணி படத்தில் இதே போன்ற ஒரு காட்சி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post
--Advertisement--