கொள்ளையனுடன் தொடர்பு - எய்ட்ஸ் சோதனைக்கு மருத்துவமனை நோக்கி ஓடும் இளம் நடிகைகள்..!


சமீபத்தில் நகைக்கடை கொள்ளை ஒன்றில் சிக்கிய கொள்ளையன் முருகன் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு ராஜவாழ்கை வந்து வந்துள்ளார். இவனுக்கு தனியாக பெங்களூருவில் பல கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்று உள்ளதாம். 

எப்படியும் போலீஸ் நம்மை பிடிக்க மாட்டார்கள் என்று நம்பி பெங்களூருவில் சென்று பதுங்கி விட்டான் முருகன். ஆனால், அவனது உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில் விவரம் தெரியாத முருகன் அவர்கள் மூலம் சிக்கி விட்டான். 

இந்த கைது சம்பவத்திற்கு பிறகு நடந்த பொதுவான மருத்துவ சோதனையின் போது தான் அவனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வெளி உலகிற்கு தெரிய வந்தது. 

கோடி கோடியாக பணத்தை கையில் வைத்துக்கொண்டு நிஜங்கள் நடமாடும் நிழல் உலகமான சினிமாவில் புகுந்து கும்மாளம் போட்டுள்ளான் அந்த கொள்ளையன். துணை நடிகைகள், சீரியல் நடிகைகள் என புகுந்து விளையாடியுள்ளான். ஒரு கட்டத்தில் எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டுள்ளது தெரிய வரவே அவனது ஆட்டம் ஆடங்கியுள்ளது. 

இந்நிலையில், இவனுடன் தொடர்பில் இருந்த சில துணை நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் தங்களுக்கும் எய்ட்ஸ் நோய் இருக்குமோ என மருத்துவமனைகள் நோக்கி ஓடி வருகிறார்கள் என சினிமா வட்டராத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. 

மேலும், கொள்ளையன் முருகனிடம் கடன் வாங்கிய தயாரிப்பாளர்கள் யார்..? வேறு ஏதேனும் ரூபத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளானா..? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விட்டுள்ளதாம் காவல் துறை.