பிகில் படத்தின் உண்மையான நான்கு நாள் வசூல் என்ன என்பதை அந்தப் படத்தைத் தயாரித்த எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சொல்லவில்லை, அந்தப் படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட்ட ஸ்கிரின் சீன் நிறுவனமும் சொல்லவில்லை.
ஆனால், சமூக வலைத்தளங்களில் 100 கோடி, 150 கோடி என பலர் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 நாட்களில் 100 கோடியும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 10 கோடியும், கேரளா, கர்நாடகாவில் தலா 10 கோடியும், வெளிநாடுகளில் 20 கோடியும் என வசூலித்துள்ளதாகச் சொல்லி உள்ளார்கள்.
இது அனைத்தும் மொத்த வசூல். அதிலிருந்து நிகர வசூல் என்ன என்பது வினியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும்தான் தெரியும். படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கே அந்தத் தகவல் போய்ச் சேர்ந்திருக்குமா..? என்பது சந்தேகம்தான்.
இந்நிலையில், பிகில் திரைப்படம் சென்னையில் மட்டும் முதல் ஐந்து நாட்களில் 7.82 கோடி வசூல் செய்துள்ளது. ஐந்தாவது நாளான நேற்று வேலை நாளாக இருந்த போதும் 84 லட்ச ரூபாயை வசூலித்துள்ளது பிகில். விரைவில், சென்னையில் மட்டும் 10 கோடி என்ற இலக்கை பிகில் எட்டும் என கணிக்கிரார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஜோதிடர்கள்.
Tags
Bigil Movie