தாடி பாலாஜி - நித்யா பிரச்சனைக்கு இது தான் காரணம் - தர்மசங்கடமான உண்மை


நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இடையே இருக்கும் பிரச்சனை ஊர் அறிந்த விஷயம்.இவர்களுக்குள் நடந்த சண்டை சில வீடியோக்கள் மூலம் இணையத்தில் வெளியாகியது. 

இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை என்று பலருக்கும் தெரியாமலேயே இருந்தது. இந்நிலையில், முதன் முறையாக இவர்களுக்கு பிரச்சனை வர என்ன காரணம்..? என்ற விபரம் தெரியவந்துள்ளது. 

தாடி பாலாஜியின் முதல் மனைவி தீபா மற்றும் தீபா-பாலாஜிக்கு பிறந்த ஆண் குழந்தை தான் காரணமாம். இப்போது, தீபாவிற்கு வேறொரு நபருடன் திருமணம் ஆகி விட்டது. ஆனாலும், நடிகர் தாடி பாலாஜி தீபாவை அடிக்கடி சந்திப்பதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில், தீபாவின் தற்போதைய கணவர் தாடி பாலாஜி என் மனைவியை சந்திக்க வருவதை நிறுத்திவிட வேண்டும் என்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தன்னுடைய முதல் மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தையின் பிறந்தநாள் அன்று அவனுக்கு ஒரு சைக்கிள் பரிசாக வழங்கப்போகிறேன் என்று நித்யா-விடம் பாலாஜி கூறியுள்ளார். 

அப்போது, ஆரம்பித்த இந்த பிரச்சனை தான் வளர்ந்து வளர்ந்து இப்போது விவாகரத்து வழக்காக நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. மகன் மீது உள்ள பாசத்தினால் தாடி பாலாஜி செய்வதும் சரி தான் என மனதிற்கு தோன்றினாலும். ஒரு மனைவியாக, பெண்ணாக, நித்யாவின் நிலையில் இருந்து யோசிக்கும் போது முதல் மனைவியை சந்திப்பது. அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஆயிரம் சொன்னாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தர்மசங்கடமான உண்மை.

--- Advertisement ---