T20 தீபாவளி ரிலீஸை விட்டுகொடுத்த நடிகர் விஜய் - ரசிகர்கள் ஏமாற்றம்..!


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 3 ஆவது முறையாக விஜய் – அட்லி கூட்டணியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இப்படத்தில் விஜய், அப்பா மற்றும் மகன் என்று இருவேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விருந்தாக இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. கடந்த, 2017, 2018, மற்றும் 2019 ஆகிய மூன்று வருடங்கள் தீபாவளியை மெர்சல், சர்கார், பிகில் என ஆக்கிரமித்த விஜய் அடுத்த வருடம் தீபாவளியை மிஸ் செய்துவிட்டார். 

அந்த இடத்தை "தல 60" படத்தின் மூலம் நடிகர் அஜித் துண்டை போட்டு ரிசர்வ் செய்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள தல 60 திரைப்படம் தீபாவளி ரிலீசை நோக்கி தயாராகவுள்ளது. 

நடிகர் அஜித்தின் வேதாளம் திரைப்படம் 2015 தீபாவளிக்கு வெளியானது. அதன் பிறகு, T20 தீபாவளிக்கு தல 60 ரிலீஸ் ஆகின்றது. தொடர்ந்து மூன்று வருடங்களாக தீபாவளி தினத்தில் படத்தை ரிலீஸ் செய்து வந்த விஜய் T20 தீபாவளியை விட்டுக்கொடுத்தது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
Previous Post Next Post
--Advertisement--