’தெறி’ மற்றும் ’மெர்சல்’ படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயின் மூன்றாவது படமான ‘பிகில்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட ‘பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் இந்த படம் ஒரு விளையாட்டு படம் என்பதை உறுதிப்படுத்தின.
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக யூகங்கள் கிளம்பின. இருப்பினும், சனிக்கிழமை வெளியான பிகில் படத்தின் டிரெய்லர் இதை உறுதிப்படுத்துகிறது.
மைக்கேல் என்ற மகன் விஜய். ஆனால் அவர் தனது ஜெர்சியில் ‘பிகில்’ என்ற புனைப்பெயருடன் இருக்கிறார். ஒரு கால்பந்தாட்ட வீரர், பின்னர் பெண்கள் அணிக்கு பயிற்சி அளிக்கிறார். வயதான விஜய், ராயப்பன், தங்க மனதுடன் உள்ளூர் டானாக வலம் வருகிறார்.
இந்நிலையில், ராயப்பன், மைக்கேல் என்பது கதாபாத்திரங்களில் பெயர் எனவும் "பிகில்" என்பது மைக்கேலின் பட்டப்பெயர் எனவும் தகவல்கள் உலா வந்து கொண்டிருகின்றன. மேலும், பிகில் என்பது கால்பந்தாட்ட அணியின் பெயராகவும் பின்னாலில் மாறுகிறது.
இதே போல, கில்லி படத்தில் சரவணவேலு என்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய். ஆனால், அவரை வேலு மற்றும் கில்லி என்ற பட்டப்பெயரை வைத்தே அழைப்பார்கள். மேலும், கபடி அணிக்கும் "கில்லி" என்றே பெயர் வைத்திருப்பார்கள்.
இதன் மூலம் கில்லி செண்டிமெண்ட் பிகில் படத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது.
Tags
Bigil Movie