கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா இடத்தை இன்னும் யாராலும் பிடிக்க முடியவில்லை. பல கிளாமர் நடிகைகள் களத்தில் இறங்கினாலும் அவர் இடத்தை நிரப்ப முடியவில்லை.
அந்த வகையில், ஓரளவு சில்க் ஸ்மிதா இடத்திற்கு வர முயற்சி செய்தவர் நடிகை முமைத்கான். இவர் ‘கந்தசாமி’, ‘மம்பட்டியான்’, ‘போக்கிரி’, ‘தலை நகரம்’ போன்ற தமிழ் உள்பட தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கவர்ச்சியில் கலக்கியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக அவருக்கும் மார்க்கெட் டல்லடித்தது.இடையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் இவரது பெயர் அடிபட்டு அவரது பெயரை டேமேஜ் ஆக்கியது.
பிறகு, பெரிய தலைகள் தலையீடு காரணமாக எஸ்கேப் ஆனார் முமைத். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "வெற்றிகள் உங்களை பலப்படுத்தாது, தோல்விகளும், போரட்டங்களும் தான் உங்களை பலப்படுத்தும்" என கூறி நடுவிரலை காட்டியபடி மோசமான போஸ் கொடுத்து அப்லோட் செய்துள்ளார்.



