சீனாவில் கொரோனாவிற்கு கொடுக்கப்பட்ட மருந்து இது தான்..! - ரகசியத்தை கூறிய சீனப்பெண்மணி..!


ஒட்டுமொத்த உலகநாடுகளையும் திருப்பி போட்டு விட்டது கொரோனா ( Covid-19 ) நோயின் தாக்கம். இப்படியெல்லாம் நடக்குமா,..? இதெல்லாம் ஹாலிவுட் படத்துல தான் நடக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த நம்மை கடந்த ஒரு மாதமாக வீட்டிலேயே கட்டி போட்டு வைத்துள்ளது கொரோனா. 

அந்த அளவுக்கு மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா, இத்தாலி நாடுகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. இந்தியாவிலும் கரோனாவின் அச்சம் காரணமாக வரும் மே 3-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. 

இந்த ஊரடங்கு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் இருந்து படிப்படியாக தளர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகின்றது. இந்தியாவில் இதுவரை 10815 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆள்ஆகி இருக்கிறார்கள். 

கடந்த 20 நாட்களுக்கு மேலாக லாக் டவுன் போடப்பட்டு இந்த நிலைமை என்றால் லாக் டவுன் இல்லையென்றால் நிலைமை மிகவும் மோசமாக மாறியிருக்கும் என்பது மட்டும் நிதர்சனம். 

இந்த வைரஸ் சீனாவின் வூகான் நகரில் தான் முதலில் உருவானது. ஆனால் இப்போது சீனா கரோனாவின் ( Corona ) தாக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தி இருக்கிறது. 

இந்நிலையில் சீனா எப்படி கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியது என சீனப்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பாரம்பர்ய வைத்தியத்தில்தான் சீனா கொரனாவைக் கட்டுப்படுத்தியது தெரிய வந்துள்ளது.

நம்முடைய தமிழ் மொழியில் பேசி அசத்தும் ஒரு சீனப்பெண்ணை பலரும் இணையத்தில் பார்த்திருப்பீர்கள். அவர் தான் எப்படி சீனா கொரோனாவை கட்டுப்படுத்தியது என்று காணொளி மூலமாக தமிழிலேயே கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ,
Previous Post Next Post
--Advertisement--