அசுரன் பட நடிகை மஞ்சு வாரியாரின் தாரள மனசு..!


மலையாள நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகைகளில் பார்வதி போல் வித்தியாசமான சிந்தனை கொண்டவர். இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ளது. 

இதனால், ஊரடங்கு பிறப்பித்திருக்கும் நிலையில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் குரல் கொடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், அன்றாடம் பணத்துக்கு பாடாத பாடு படும் திருநங்கைகள் ஊரடங்கில் என்ன செய்ய முடியும். இவருகளுக்கு, உணவு வசதி செய்து தர யாரும் முன்வரவில்லை. 

நடிகை மஞ்சு வாரியருக்கு இதுபற்றி தெரிந்ததும் அவர்களின் பசியைப் புரிந்து கொண்டு உணவுக்காக ரூ 35 ஆயிரம் வழங்கி உள்ளார். மஞ்சுவாரியர் நிதி அளித்த உதவியதற்குத் திருநங்கை அமைப்பினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். ஏற்கெனவே இவர் பெப்சி தொழிலாளர்களுக்காக 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசுரன் பட நடிகை மஞ்சு வாரியாரின் தாரள மனசு..! அசுரன் பட நடிகை மஞ்சு வாரியாரின் தாரள மனசு..! Reviewed by Tamizhakam on April 15, 2020 Rating: 5
Powered by Blogger.