ரஜினியின் பேட்ட, சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய இரு திரைப்படங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைக்கு வந்தது. சமீபத்தில், இவரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு அதனை போட்டோக்களும்
டெலிட் செய்யப்பட்டு மோசமான பதிவுகள் வலம் வந்தன.
ஆனால் எப்படியோ தனது டெக்கினிக்கல் டீமை வைத்து அந்த ஹேக்கர்களிடம் இருந்து
தனது அக்கவுண்ட்டை இரண்டு நாட்களில் மீட்டெடுத்து விட்டார் மேகா ஆகாஷ்.
நல்ல வேளை தன்னுடைய போனில் இருந்த புகைப்படங்கள் எதுவும் லீக் ஆகவில்லை என்ற சந்தோஷத்தில் இருக்கிறார் அம்மணி. சமூகவலைத்தளங்கள் பக்கம் அரிதாக எட்டிப்பார்க்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது, "நீ என்னை காப்பாத்த வேண்டாம். என்கூட சேர்ந்து ஓடி வந்துட்டா போதும்" என கூறி சில க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.
Tags
Megha Akash