முதன் முறையாக பிகினி உடையில் படு கவர்ச்சியாக நடிகை காஜல் அகர்வால்..! - திக்குமுக்காடிய ரசிகர்கள் ..!


நடிகை காஜல் அகர்வால் 2004 ஆம் ஆண்டு ஹோ கயா நா என்ற இந்தித் திரைப்படத்தின்மூலம் அறிமுகமானார். 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 

அடுத்து 2008 ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் மிகவும் பிரபலமாக வலம் வரும் நடிகையான காஜல் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியன் 2 மட்டுமல்லாது, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ஊரடங்கினால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார். 

கவர்ச்சியாக படங்களில் நடிக்கும்இவர் நீச்சல் உடையில் நடிப்பது என்றால் மட்டும் கோடி ரூபாய் கொடுத்தாலும் நோ சொல்லிவிடுவார். ஆனால், கத்தரிக்காய் முத்தினால் கடைக்கு வந்து தான் ஆகவேண்டும் என்பது போல தற்போது, ஹிந்தி படம் ஒன்றில் பிகினி உடையில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளராம் அம்மணி.

பொதுவாக தமிழ், தெலுங்கு நடிகைகள் பாலிவுட் சென்றாலே தங்களது கொள்கைகளை தளர்த்தி விடுவார்கள். அந்த வகையில், காஜல் அகர்வாலும் கொள்கையை தளர்தியுள்ளார். முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்கும் இவர் சில கண்டிஷன்களையும் போட்டுள்ளாராம். 

எக்காரணம் கொண்டு பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை போஸ்டர்களில் பயன்படுத்த கூடாது மற்றும் படப்பிடிப்பு பகலில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். காட்சிக்கு தேவையான படக்குழு தவிர வேறு யாரும் ஸ்பாட்டில் இருக்க கூடாது போன்ற கண்டிஷன்களோடு பிகினி உடையில் நடிக்கவுள்ளாராம் அம்மணி.

காஜல் அகர்வாலின் பிகினி உடையில் நடிப்பது மற்றும் இந்த கண்டிஷன்களை அறிந்த ரசிகர்கள் திக்கு முக்காடித்தான் கிடக்கிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--