"உன் 30 வினாடி சுகத்திற்கு நான் ஆள் இல்லை.." - தனது உடலை மோசமாக வர்ணித்த ஆசாமிக்கு நடிகை பதிலடி..!


பிரபல நடிகை அபர்ணா நாயர். 30 வயது ஆகும் இவர் மலையாளத்தில் மல்லுசிங், ஹோட்டல் கலிபோர்னியா, ரன் பேபி ரன், கல்கி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழில், "எதுவும் நடக்கும்" என்ற படத்தில் கார்த்திக்குமார் ஜோடியாக நடித்தவர். தற்போதும் மலையாளத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அபர்ணா பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைத் தளத்தில் செம்ம ஆக்டிவாக செயல்படுகிறவர்.

அவற்றை,  தனது படங்கள் பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகமாக அதனை பயன்படுத்திக்கொள்கிறார். சமீபத்தில் தனது படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த படத்தை புகழ்வது போல ஒரு ரசிகர் அபர்ணாவை படு ஆபாசமாக வர்ணித்திருந்தார். அந்த ரசிகரின் பெயர், படத்தை வெளியிட்டு அபர்ணா அவருக்கு ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

இந்தப் பக்கத்தை எனது நலம் விரும்பிகளுடன் உரையாடுவதற்காகப் மட்டுமே பயன்படுத்துகிறேன். அருவருப்பான நடத்தை இதுபோன்ற மோசமான கருத்துக்களை பதிவிட்டு, தங்களின் பாலியல் கற்பனைகளை தீர்த்துக் கொள்வதற்கான தளமல்ல எனது சமூக வலைத்தள பக்கங்கள்.

நான் உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யப் போகிறேன் என்றோ, உங்கள் கருத்துகளை கண்டுகொள்ள மாட்டேன் என்றோ நினைத்தால் அது தவறு.

இதுபோன்ற அருவருப்பான நடத்தைகளை சகித்துக்கொள்ள என்னால் முடியாது. உங்களுக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அதை மனதில் வைத்து கருத்துக்களை வெளியிடுங்கள். உங்களுக்கு, 30 விநாடி அந்த சந்தோஷத்தை கொடுப்பதற்கு நான் ஆள் கிடையாது. என்று அதிரடி பதிலை கொடுத்துள்ளார் அபர்ணா.

"உன் 30 வினாடி சுகத்திற்கு நான் ஆள் இல்லை.." - தனது உடலை மோசமாக வர்ணித்த ஆசாமிக்கு நடிகை பதிலடி..! "உன் 30 வினாடி சுகத்திற்கு நான் ஆள் இல்லை.." - தனது உடலை மோசமாக வர்ணித்த ஆசாமிக்கு நடிகை பதிலடி..! Reviewed by Tamizhakam on June 10, 2020 Rating: 5
Powered by Blogger.