"என்ன கன்றாவி இது..?" - இணையத்தில் தீயாய் பரவும் கீர்த்தி சுரேஷின் வீடியோ..!
நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமான புதிதில் இவர் நடித்து வெளியான படங்கள்
தோல்வியடைந்தாலும், தற்போது சிறந்த நடிகை என்கிற இடத்தை பிடித்து விட்டார்.
குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல
இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள் என்பது
நாம் அறிந்தது தான்.
மேலும் இவர் அறிமுகமான சில வருடங்களிலேயே விஜய், சூர்யா, விஷால், தனுஷ்,
விக்ரம், என முன்னணி நடிகர்கள் படங்களாக மட்டுமே தேர்வு செய்து நடித்தார்.
தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
நடிகை நயன்தாராவின் பாணியை பின்பற்றி தற்போது, கதைக்கும் கதாநாயகிக்கும்
முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்வதில் அதிக கவனம்
காட்டுகிறார்.
இந்நிலையில், நானும் உடலை ஸிலிம் தோற்றத்துக்கு மாற்றப் போகிறேன் என்று படாதபாடுபட்டு ஒல்லியானார். ஆனால் அவரது முகத்தோற்றமே மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அவர் குடும்பத்தினருக்கு ஸ்பெஷல் தோசை செய்யப்போவதாகக் கூறியதும் மசாலா தோசை அல்லது பன்னீர் தோசையாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அவரோ சாக்லெட் தோசை சுட்டு அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி டிஷ் இது என்று கலாய்த்து வருகிறார்கள்.
"என்ன கன்றாவி இது..?" - இணையத்தில் தீயாய் பரவும் கீர்த்தி சுரேஷின் வீடியோ..!
Reviewed by Tamizhakam
on
June 02, 2020
Rating:
