பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது - இதை கவனித்தீர்களா..?


நடிகர் விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு, பிச்சைக்காரன் -- 2 படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை, பாரம் படப்புகழ், பிரியா கிருஷ்ணசாமி இயக்க உள்ளார்.

இது, விஜய் ஆண்டனி தயாரிக்கும், 10வது படமாகும். ஒளிப்பதிவை, தேனி ஈஸ்வர் கவனிக்க, மகேஷ் மேத்யூ சண்டைப்பயிற்சி இயக்குனராக தேர்வாகியுள்ளார்.

இது குறித்து, விஜய் ஆண்டனியின் மனைவியும், தயாரிப்பாளருமான ஃபாத்திமா அவர்கள் கூறியதாவது, எங்கள் மற்றொரு கனவுப்படத்தை, பிச்சைக்காரன் - 2 என்ற தலைப்பில், அறிவிப்பதில் மகிழ்ச்சி. முதலில், பிச்சைக்காரன் படத்தை தந்த, இயக்குனர் சசிக்கு நன்றி. அதிக நம்பிக்கையுடன் எங்கள் பயணத்தை தொடர்கிறோம். என்று கூறியுள்ளார்.

2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர்.

இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு முன்னணி நாயகன் அந்தஸ்து கிடைத்தது. இந்நிலையில், கரோனா ஊரடங்கில் 'பிச்சைக்காரன் 2' படத்துக்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதி முடித்துள்ளார்.

பொதுவாகவே, ஒரு படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் எழுகின்ற முதல் கேள்வி இயக்குனர் யார் என்பது தான். முதல் பாகத்தை இயக்கியவரே இயக்குவாரா..? அல்லது வேறு யாராவது இயக்குவார்களா..? என்ற எதிர்பார்ப்பு நிலவும்.


இது குறித்து, கடந்த சில நாட்களாகவே இந்தப் படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் இயக்குவார் என்று விளம்பரப்படுத்தி வந்தது படக்குழு. பலரும் அதை இயக்குநர் பாலா என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால், அந்தப் படத்தை கடந்த ஆண்டு தேசிய விருது வென்ற 'பாரம்' படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி என்ற பெண் இயக்குனர் இயக்கவுள்ளார். இதனை ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது - இதை கவனித்தீர்களா..? பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது - இதை கவனித்தீர்களா..? Reviewed by Tamizhakam on July 23, 2020 Rating: 5
Powered by Blogger.