38 வயதில் நடிகை அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் ஷாக்..!


நடிகை அனுஷ்கா ஷெட்டி திரையுலகில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. 2018 ஆம் ஆண்டு வெளியான 'பாகமதி' படத்திற்கு பின், இவர் கதாநாயாகையாக நடிக்காமல் இருந்த நிலையில், கடந்த வருடம் சயீர நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து 'நிசப்த்தம்' படத்தில் நடித்துள்ளார்.அருந்ததி படம் அனுஷ்காவுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இஞ்சி இடுப்பழகி படத்தில் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை கூட்டிய அவரால் பின்னர் அதை குறைக்க முடியவில்லை. இதனால் முன்னணி கதாநாயகர்கள் வேறு இளம் நடிகைகளை தங்களுக்கு ஜோடியாக்கினர். அனுஷ்காவுக்கு படங்கள் குறைந்தது. தற்போது மாதவனுடன் சைலன்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ஊரடங்கால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தியேட்டருக்கு பதிலாக இணைய தளத்தில் ரிலீஸ் செய்யலாமா என்று யோசிக்கின்றனர். கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தனர்.

ஆனால், அந்த படம் கைவிடப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது ஆகிறது. திருமணத்திற்காக வரன் தேடியும் சரியான வரன் கிடைக்காததால் அதற்குண்டான பரிகாரங்கள் செய்ய பல கோயில்களுக்கு சென்று வந்துகொண்டிருந்தார் அனுஷ்கா.

இந்த நிலையில் தற்போது சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வருகிறது.இது அனுஷ்கா ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.

38 வயதில் நடிகை அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் ஷாக்..! 38 வயதில் நடிகை அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on July 21, 2020 Rating: 5
Powered by Blogger.