"HORN OK PLEASE" இதற்கு அர்த்தம் என்ன..? - இரண்டாம் உலகப்போருக்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா..?
பொதுவாக கனரக வாகனங்களான லாரி, ட்ராக்டர் போன்றவற்றின் பின்புறம் ஏதாவது தத்துவம், வண்டி உரிமையாளரின் பெயரின், கம்பெனியின் பெயர் என ஏதாவது ஒன்றை கொட்டை எழுத்தியில் எழுதி வைத்திருப்பார்கள்.
நாமும் ஹைவேக்களில் போகும் போதோ அல்லது ட்ராஃபிக் ஜாமில் நிற்கும் போதோ நம்மையும் மறந்து அவற்றை படித்துக்கொண்டிருப்போம். ஆனால், பெரும்பாலான வாகனங்களில் "Horn OK Please" எழுதியிருப்பதை பார்த்திருப்போம்.
அதற்கு என்ன அர்த்தம்..? அதற்கும் இரண்டாம் உலகப்போருக்குமான தொடர்பு என்ன.? என்ற சுவாரஸ்யமாக சில தகவல்களை தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
நிஜமாக லாரி உரிமையாளருக்கே இதற்க்கான அர்த்தம் தெரியுமா..? தெரியாதா..? என்பது தெரியாது. வண்டியை பெயிண்டிங் செய்தால் இலவச இணைப்பாக "Horn OK Please " என்பதையும் எழுதி விட்டு விடுவார்கள்.
அந்த வாசகம் இல்லாமல் வண்டியே ஓடாது என்பது போல பெரும்பாலனா லாரிகளில் எழுதப்பட்டிருக்கும். இந்த வாசகம் குறித்து உலக புகழ் பெற்ற போர்ப்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளன.
இது குறித்து பல தரப்பட்ட தகவல்கள் கூறப்பட்டாலும், அட.. ஏற்றுக்கொள்ள கூடியாத இருக்கிறதே..! இப்படியும் இருக்கலாம்..! என்று நம்மை உணர வைக்கும் சில தகவல்களை மட்டும் நாம் இங்கே பார்க்கலாம்.
இலக்கண பிழை
உண்மையில் இது இலக்கண பிழை என்று கூறுகிறார் ஒரு தரப்பினர். "Horn Please" என்பது தான் சரி என்றும் "OK" என்ற வார்த்தை வெறுமனே இடத்தை பூர்த்தி செய்ய எழுதப்படும் வார்த்தை என்று கூறுகிறார்கள்.
இரண்டாம் உலகப்போர்
இரண்டாம் உலகப்போரின் போது கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவியது. இதனால், அப்போது இருந்த வாகன உற்பத்தியாளர்கள் மண்ணெண்ணெய்யால் ஓடக்கூடிய வகையில் வாகன என்ஜின்களில் சில மாற்றங்களை செய்தனர்.
அப்படி மாற்றம் செய்யப்பட்ட வாகனகள் பொருத்தப்பட்ட எஞ்சின்கள் கொண்ட வண்டிகளில் மட்டும் "OK" (On Kerosene) என்று அடையாளமிட்டனர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்பும் இந்த வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தன, அதன் தொடர்ச்சியாகவே இப்போது டீசலில் இயங்கும் வாகனங்களிலும் "OK" என்று எழுதுவதை வழக்கமாக தொடர்ந்து விட்டனர் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
TATA நிறுவனத்தின் சோப்பு
அந்த காலத்தில் TATA நிறுவனம் தயாரித்த OK என்ற சோப்பின் லோகோ தான் தாமரை வடிவிலான "OK" என்றும் அந்த லோகோவை தங்கள் நிறுவனம் தயாரித்த வாகனங்களில் விளம்பர நோக்கில் அச்சிட்டார்கள் என்றும் அதுவே பின்னாளில் தொடச்சியாக வந்து கொண்டிருகின்றது என்றும் கூறுகிறார்கள் சிலர்.
என்ன இருந்தாலும், ஒரு நியாயம் வேணாமாங்க...! என்று தானே கேட்கிறீர்கள். .. ஆம்,. இருந்தாலும், இது யோசிக்கும் வகையில் உள்ளதே..!
Horn and Over taKe Please
தயவுசெய்து ஹார்ன் அடித்து விட்டு ஓவர் டேக் செய்யவும் என்பதை தான் Horn OK Please என்று எழுதி வைத்துள்ளார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
உங்களுக்கு ஏதேனும் காரணம் தெரிந்தால் கமெண்ட்டில் எழுதுங்கள் நண்பர்களே..!
"HORN OK PLEASE" இதற்கு அர்த்தம் என்ன..? - இரண்டாம் உலகப்போருக்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா..?
Reviewed by Tamizhakam
on
July 11, 2020
Rating:
