ஓஹோன்னானா..! - தோண்ட தோண்ட கிடைக்கும் கோடிகள் - M.B.A., பட்டதாரிகள் பண்ற வேலையா இது..? - படமே எடுக்கலாம் போல இருக்கே..!


இந்த செய்தியை முழுமையாக படித்த பிறகு ஓஹோன்னானா.. படமே எடுக்கலாம் போல இருக்கே என்று தான் உங்களுக்கு தோன்றும். அந்த அளவுக்கு பக்கவான திருட்டு தொழில் செய்து வந்துள்ளது ஒரு கும்பல்.

அட கார் திருடுறதெல்லாம் சாதரணமாக நடந்துகிட்டு தான் பாஸ் இருக்கு இதுல என்ன பிரமாண்டம் இருக்க போகுதுன்னு கேக்குறீங்களா..? ஆம், பிரமாண்டமா தான் இருக்கு இந்த திருட்டு.

பொதுவாக கார்களை திருடினால் முதலில் பார்ட் பார்டாக கழட்டி தங்களுக்கு தெரிந்த உதிரி பாகாகங்கள் கடையில் விற்று விடுவார்கள். ஆகாத பொருட்களை எடைக்கு போட்டு ஏப்பம் விட்டு விடுவார்கள். ஆனால், இவர்கள் திருடிய காரை ஆவணத்துடன் செகன்ட் ஹேண்டாக விற்பனை செய்து வந்துள்ளார்கள்.

போலியாக ஒரு RC புக்கை தயார் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா..? அது தான் இல்லை. அத்தனை RC புக்கும் ஒரிஜினல் RC புக். எப்படி மண்டை வெடிக்குற மாதிரி இருக்கா..?

இது எப்படி சாத்தியம்.. என்று நினைகிறீர்களா..? அங்கு தான் இந்த கும்பல் தங்களுடைய பலே சித்து விளையாட்டை காட்டி போலீசாரையே கதி கலங்க வைத்துள்ளது.

இதுவரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட காரை இப்படி விற்பனை செய்து கோடிகளில் புலங்கி வந்துள்ளது இந்த கும்பல். வாங்க எப்படி ஆட்டைய போட்டாங்க..? ஒரிஜினல் RC புக் எங்க இருந்து வந்துச்சி என்று பார்ப்போம்.


இவர்கள் ஆட்டையை போடுவதெல்லாம் குறைந்த பட்சம் 20 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை ஆக கூடிய கார்கள் தான். முதலில் இவர்கள் காரை திருடுவது இல்லை. அதற்கு பதிலாக, RC புக்கை வாங்குகிறார்கள்.

இயற்கை சீற்றம், வெள்ளம், விபத்து இப்படி ஏதாவது ஒன்றில் சிக்கி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் கார்களை இன்சுரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் ஏஜெண்டுகள் மூலம் தேடிப்பிடித்து அந்த கார்களின் RC மற்றும் பிற ஆவணங்களை குறைந்த விலைக்கு வாங்குகிறார்கள்.

பிறகு, அந்த RC மற்றும் ஆவணகளுக்கு ஏற்ப கார் மாடல், கலர் முடிவு செய்து விட்டு தேடி தேடி திருடி. பிறகு, காரின் நெம்பர் ப்ளேட் முதல், சேசிஸ் நம்பர் வரை அனைத்தையும் அந்த ஆவணத்துக்கு ஏற்றார் போல மாற்றியுள்ளது இந்த கும்பல்.

இப்போது அந்த காரின் உண்மையான ஓனர் வந்தால் கூட அவரது காரை அடையாளம்கண்டு பிடிக்க முடியாது. இப்படி கார்களின் ஆவணங்களை கைப்பற்ற இன்சுரன்ஸ் நிருவனகளில் வேலை பார்க்கும் ஆட்களும் உதவி செய்துள்ளார்கள் என்பது தான் ஹைலைட்டே..!

கிடைக்குற காரை திருடும் திருடர்கள் ஒரு பக்கம். இந்த கார் தான், இந்த கலர் தான்..இந்த மாடல் தான் என்று குறி வைத்து திருடும் கும்பல் மறுப்பக்கம்.

இவனுங்களுக்கு நடுவுல குருவி சேக்குற மாதிரி காசை சேத்தி வச்சி.. மாசா மாசம் EMI கட்டி கார் வாங்கி ஒட்டிக்கொண்டிருக்கும் மக்கள் ஒருபக்கம். உஷாரா இருங்க மக்கா....!


ஓஹோன்னானா..! - தோண்ட தோண்ட கிடைக்கும் கோடிகள் - M.B.A., பட்டதாரிகள் பண்ற வேலையா இது..? - படமே எடுக்கலாம் போல இருக்கே..! ஓஹோன்னானா..! - தோண்ட தோண்ட கிடைக்கும் கோடிகள் - M.B.A., பட்டதாரிகள் பண்ற வேலையா இது..? - படமே எடுக்கலாம் போல இருக்கே..! Reviewed by Tamizhakam on July 26, 2020 Rating: 5
Powered by Blogger.