வித்தியாசமான உடையில் ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை சமந்தா - வைரல் புகைப்படங்கள்..!


பொதுவாக, திருமணம் என்றாலே ஜிகுஜிகு பட்டுப்புடவை, மின்னும் நகைகள், தலை நிறைய பூ என்ற ஹேர்ஸ்டைலைத் தான் காலங்காலமாக பெண்கள் கடைபிடித்து வருகின்றனர். 

ஆனால் சமீபகாலமாக கொஞ்சம் கொஞ்சமாக இந்த டிரெண்ட் மாறி வருகிறது. இதற்கு நடிகைகளும் முக்கிய காரணம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த நடிகர் ராணா திருமணமே இதற்கு நல்ல உதாரணம். 

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தத் திருமணத்தில் குறைவான அளவிலேயே உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். அவர்களில் நடிகை சமந்தாவும் ஒருவர். 

எளிமையான சந்தேரி சில்க் காட்டன் சேலை அணிந்து மிக எளிமையான உடையில் ராணா திருமணத்தில் அவர் கலந்து கொண்டார். நீல நிறத்தில் எந்தவித கிராண்ட் டிசைன்களும் இன்றி எளிமையாக இருந்தது அந்த கைத்தறி காட்டன் புடவை. 

ஆனால் அதற்கு நேர்மாறாக சற்று ஆடம்பரமாக கழுத்தில் அவர் நகை அணிந்திருந்தார். புடவையின் நிறத்திற்கு ஏற்பட கழுத்தை ஒட்டி சோக்கர் , சாண்டிலியர் காதணிகள் அணிந்து வந்திருந்தார் சமந்தா. கைகளில் வளையல்கள் எதுவும் அணியவில்லை. 


மேலும் புடவையைப் போலவே சிகை அலங்காரத்திலும் அவர் எளிமையையே கடைபிடித்திருந்தார். லோ பன் ஹேர் ஸ்டைல் செய்திருந்தார். 


எளிமையான சட்டில் மேக்-அப் போட்டுக் கொண்டு எளிமையாக அதே சமயம் பார்க்கும் போது ரிச்சாக இருந்தது அவரது தோற்றம். சமந்தாவின் இந்த வித்தியாசமான ஸ்டைல் அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

வித்தியாசமான உடையில் ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை சமந்தா - வைரல் புகைப்படங்கள்..! வித்தியாசமான உடையில் ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை சமந்தா - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 11, 2020 Rating: 5
Powered by Blogger.