முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி - வாயை பிளந்த ரசிகர்கள்..!


நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. 

அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். 

பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். 

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது. ஆனால், படத்தின் கதையும், திரைக்கதையும் இழு இழுவென இழுத்துக்கொண்டு போனதால் மண்ணை கவ்வியது.

இடையில், பிரபல நடிகருடன் காதல் , லிவ்-இன்-டுகெதர் வாழ்கை என கிசுகிசுக்கப்பட்டார். இதனால், சில நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.

எடை அதிகரித்த காரணத்தால் பல திரைப்படங்களின் வாய்ப்பை இழந்தார். மீண்டும் தவற விட்ட தனது இடத்தை பிடிக்க அஞ்சலி அதிரடியாக தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார்.அவ்வப்போது தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு தொடர்ந்து கிளாமராக நடிக்க மட்டுமே வாய்ப்பு வந்துக்கொண்டிருகின்றது.

இந்நிலையில், இவர் ஒப்பந்தமாகியுள்ள புதிய படம் ஒன்றில் பிகினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகின்றது.

கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பிகினி உடையில்நடிகை அஞ்சலி நடிக்கவிருப்பது இதுவே முதன் முறையாகும். இதனை அறிந்த ரசிகர்கள், ஓஹோ.. நீச்சல் உடையில் நடிக்கத்தான் உடல் எடையை குறைத்தாரா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி - வாயை பிளந்த ரசிகர்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 19, 2020 Rating: 5
Powered by Blogger.