அனகொண்டாவால் அவஸ்தை..! - வீட்டைகாலி செய்துகொண்டு ஓட்டம் பிடித்த இளம் நடிகை..!


பக்கத்துக்கு ஸ்டேட்டை சேர்ந்த அக்கா, தங்கை என ஜோடியாக நடிக்க வந்தார்கள் அந்த நடிகைகள். தங்கைக்கு கிடைத்த மார்கெட் அக்கா நடிகைக்கு கிடைக்க வில்லை. இதனால், கன்னட படங்களில் நடிக்க சென்று விட்டார் அக்கா.

ஆனால், தனக்கு போதிய வாய்ப்புகள் கிடைத்தால் தமிழ் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார் தங்கை நடிகை. இவர் அறிமுகமான பேய் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்த நடிகை அனகொண்டா நடிகருடன் ஏற்பட்ட நெருக்கம் இப்போது கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார்கள். தமிழ் படங்களில் நடிக்க எதுவாக தலைநகரிலேயே ஒரு அப்பார்ட்மெண்டில் வாடைக்கு இருந்து வந்தார் அம்மணி.

மாத வாடகை மட்டும் 1.5 லட்சம் கொடுத்து வந்துள்ளார். கிட்ட தட்ட ஒன்னரை வருடமாக அந்த அப்பார்ட்மெண்டில் தான் வசித்து வருகிறார். கூட்டிகழித்து பார்த்தல் அட்வான்ஸ் 10 லட்சம் வாடகையாக மட்டும் இதுவரை 25 லட்சம் கொடுத்துள்ளாராம் அம்மணி.

கொடுமை என்னவென்றால் அந்த அப்பார்மெண்டை விலைக்கு வாங்கினாலே 60 லட்ச ரூபாய் தானாம். ஆனால், அம்மணி அட்வான்ஸ் + வாடகை என 35 லட்சம் கொடுத்துள்ளார். இதனை அனகொண்டா நடிகரிடம் பேச்சு வாக்கில் சொல்ல அனகொண்டா களத்தில் இறங்கி அந்த அப்பர்மெண்டை மேற்கொண்டு 25 லட்சம் கொடுத்து வாங்கி விடலாம் தேவைப்படும் போது விற்று விடலாம் என ஒரு உருட்டு உருட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த அபார்ட்மெண்ட் உரிமையாளரிடம் பேசியுள்ளார் விஷால். உஷாரான உரிமையாளர் வாடகை என்று தான் ஒப்பந்தம். ஒரு படத்தில் நடித்து முடிக்கும் வரை தான் இங்கு இருப்பேன் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தான் தங்குவேன் என்று கூறினார்.

நான் பத்து லட்ச ரூபாய் அட்வான்சை திருப்பி கொடுத்து விடுகிறேன் இடத்தை காலிபண்ணுங்க என்று கூறி விட்டாராம். இதோடு நிற்காமல், நடிகையிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டோஸ் விட்டுள்ளார். தெரிந்தவர் கேட்டதால் தான் உங்களுக்கு வீட்டை வாடைக்கு தந்தேன். நீங்க தயவு செஞ்சு வீட்டை காலி பண்ணுங்க என்று கூறி நடிகையை டீசண்டாக வீட்டை விட்டு அனுப்பியுள்ளார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் எங்குபோவது என்று தெரியாமல் அனகொண்டாவின் வீட்டில் இரண்டு நாள் தங்கியிருந்து விட்டு அவசர வேலை என்று ஈ-பாஸ் போட்டு சொந்த ஊரான பெங்களூருவுக்கு சென்றுள்ளார் பேய் நடிகை. அதாவது, ஒருத்தனுக்கு பிரச்சனை வரணும்ன்னு முடிவு பண்ணிட்டா அது லாக்டவுன் நேரத்துலயும் வந்தே தீரும் என்று நிருபித்துள்ளது இந்த சம்பவம்.

அனகொண்டாவால் அவஸ்தை..! - வீட்டைகாலி செய்துகொண்டு ஓட்டம் பிடித்த இளம் நடிகை..! அனகொண்டாவால் அவஸ்தை..! - வீட்டைகாலி செய்துகொண்டு ஓட்டம் பிடித்த இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on August 02, 2020 Rating: 5
Powered by Blogger.