வம்பு நடிகை எங்கேயும் போகவில்லை - அவர்களுக்கு பயந்து இங்கே தான் பம்மிக்கொண்டிருக்கிறாராம்..!
சமீப காலமாக சமூகவலைதளங்களில் பிரபலங்களே சண்டை போட்டுக்கொள்வது பொதுவான சினிமா ரசிகர்களுக்கு முக சுழிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், தற்போது அதற்கு ஒரு படி மேலே சென்று பிரபல நடிகர்களின் மனைவிமார்களை அசிங்க அசிங்கமாக பேசினார் அந்த சர்ச்சை நடிகை.
யாரோ சிலர் அவரை திட்டி கமெண்ட் செய்ததற்கு அவர்களுடைய ப்ரோபைல் பிக்சரில் இருக்கும் நடிகரின் மனைவிமார்களை வசை பாடுவது எல்லாம் என்ன நியாயம் என்பதில் ஆரம்பித்து காது கூசும் அளவுக்கு அந்த நடிகை கிழித்து எடுத்துவிட்டார்கள் ரசிகர்கள்.
சில ரசிகர்கள், போலீஸ் புகார் என்று பல மாவட்டங்களில் புகார் பதிவு செய்து கொண்டிருக்க, இன்னும் சில ரசிகர்கள் அவரை நேரில் பார்த்து செய்ய வேண்டிய மரியாதையை செய்ய வேண்டும் என்று தேடிக்கொண்டிருகின்றனர்.
சிக்குனா டாப் டு பாட்டம் சிதைத்துவிடுவார்கள் என்று உணர்ந்து கொண்ட நடிகை நான் அங்க இருக்கேன்.. இங்க இருக்கேன்... கோயம்புத்தூர் பக்கம் இருக்கேன்.. மும்பை பக்கம் இருக்கேன் என்று கப்ஸா விட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆனால், அவர் சென்னையிலேயே தான் தன்னுடைய தோழி ஒருவரது வீட்டில் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அடிக்கடி செல்ஃபி புகைப்படங்களை பதிவு செய்யும் அவர் அவருடைய பேக்ரவுண்டை அதிகமாக ப்ளர் செய்து விட்டு தான் அப்லோட் செய்கிறார்.
காரணம், பேக்ரவுண்டை பார்த்தால் நாம் எங்கே இருக்கிறோம் என்று தெரிந்து விடும் என்பதால். இம்புட்டு பயத்தை மனதில் வைத்துக்கொண்டு இல்லாத அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் அந்த நடிகை நிச்சயம் எங்காவது செமத்தியாக வாங்கி கட்டிக்கொள்ளத்தான் போகிறார் என்று கூறுகிறார்கள்.
மேலும், லாக் டவுன் முடிந்ததும் நடிகை மீது சட்டப்படி நடவடிக்கைகள் பாயும் எனவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்த சினிமா புள்ளிகள்.
வம்பு நடிகை எங்கேயும் போகவில்லை - அவர்களுக்கு பயந்து இங்கே தான் பம்மிக்கொண்டிருக்கிறாராம்..!
Reviewed by Tamizhakam
on
August 22, 2020
Rating:
