அக்டோபர் 30-ம் தேதி காஜல் அகர்வால் திருமணம் - மாப்பிள்ளை இவர் தான் - புகைப்படங்கள் இதோ..!


தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் அக்டோபர் 30-ம் தேதி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்ய இருக்கிறார். 
 
இதற்கான அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் உடன் 'இந்தியன்' மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படங்களில் நடிக்கிறார். 
 
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் தொழிலதிபர் ஒருவருடன் காஜலுக்கு திருமணம் நிச்சயம் ஆனதாக செய்தி வந்தது. தொடர்ந்து அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக நேற்று முதல் செய்தி வெளியானது. இந்நிலையில் தனது திருமண அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் காஜல். 
 
அதில், நான் அக்டோபர் 30-ம் தேதி கவுதம் கிட்சுலு என்பவரை திருமணம் செய்ய இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி. மும்பையில் எங்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்கிறது. 
 
 
இந்த பொது முடக்கம் எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஒளியையும் தந்துள்ளது. அதேசமயம் அந்த வாழ்க்கை ஒரு விதி பதட்டத்தையும் தருகிறது. உங்களின் அன்பு மற்றும் ஆசி நன்றி. 


 
புதிய வாழ்க்கைக்கு செல்லும் எங்களுக்கு உங்களின் வாழ்த்து தேவை. எப்போதும் போல் தொடர்ந்து படங்களின் மூலமாக ரசிகர்களை மகிழ்விப்பேன் நன்றி. இவ்வாறு காஜல் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 30-ம் தேதி காஜல் அகர்வால் திருமணம் - மாப்பிள்ளை இவர் தான் - புகைப்படங்கள் இதோ..! அக்டோபர் 30-ம் தேதி காஜல் அகர்வால் திருமணம் - மாப்பிள்ளை இவர் தான் - புகைப்படங்கள் இதோ..! Reviewed by Tamizhakam on October 06, 2020 Rating: 5
Powered by Blogger.