"கிட்னி எல்லாம் கிடையாது.., கொஞ்சம் சட்னி வேணா தரேன்.." - நயன்தாரா கடுதாசிக்கு நடிகர் விஜய் பதில்..!


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 
 
இந்த நிலையில் தளபதி அவருடைய 65ஆவது படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்ததாகவும், ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியானது. 
 
ஆனால், தற்போது தளபதி 65 படத்தில் இயக்குனரை மாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவிக்கொண்டிருகின்றன. இந்நிலையில், தளபதி 65 படத்திற்கான வாய்ப்பை கோரி லேடி சூப்பர் ஸ்டார் தளபதிக்கு ரகசிய தூது அனுப்பினாராம். 
 
முருகதாஸ் தளபதி 65 படத்தில் இருந்து விலகியதால் தற்போது தளபதி 65 படத்திற்கு ஒரு இயக்குனர் தேவை என்ற நிலை உருவானதால் பல இயக்குனர்கள் தளபதி படத்தில் இணைய போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கான தேடுதல் படமும் தீவிரமாக நடந்து வருகிறது. 
 
இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தளபதிக்கு ரகசிய கடுதாசி அனுப்பி இருக்கிறார் என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது. மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன். 
 
ஆனால், தளபதி 65 படத்திற்கு ஹீரோயினாக நடிக்க கடுதாசி அனுப்பவில்லையாம். ஆம், அவருடைய காதலரான விக்னேஷ் சிவனுக்கு இயக்குனர் வாய்ப்பை தருமாறு கோரி தான் தூது அனுப்பினாரார் என்றும் கூறப்படுகிறது.
 
இதை அறிந்து ஷாக் ஆன தளபதி இதற்கு சற்றும் செவி சாய்க்காமல் ""கிட்னி எல்லாம் கிடையாது.., கொஞ்சம் சட்னி வேணா தரேன்.." என்று வடிவேலு பாணியில் முடியவே முடியாது என்று கறாராக பேசி அனுப்பிவிட்டாராம். இந்த தகவல் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
"கிட்னி எல்லாம் கிடையாது.., கொஞ்சம் சட்னி வேணா தரேன்.." - நயன்தாரா கடுதாசிக்கு நடிகர் விஜய் பதில்..! "கிட்னி எல்லாம் கிடையாது.., கொஞ்சம் சட்னி வேணா தரேன்.." - நயன்தாரா கடுதாசிக்கு நடிகர் விஜய் பதில்..! Reviewed by Tamizhakam on November 10, 2020 Rating: 5
Powered by Blogger.