தப்பிய கொள்ளையர்கள் - 18 மணி நேரத்தில் சிக்கியது எப்படி..? - சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்யம்..!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ளது முத்தூட் பைனான்ஸ் நிறுவனம். நகைகளை வாங்கி அடமானம் வைத்து, நிதியளிக்கும் நிறுவனமாக செயல்பட்டுவருகிறது. 
 
இந்த நிதி நிறுவனத்தில் நேற்று காலையில் திடீரென முகமூடி அணிந்தபடி வந்த துப்பாக்கியுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. வெளியே நின்ற காவலரை துப்பாக்கி முனையில் பிடித்துவைத்துக்கொண்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். 
 
ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் 96 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். நகரின் முக்கியமான பகுதியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
அதனையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடினர். நகையில் இருந்த ஜி.பி.எஸ் உதவியுடன் கொள்ளையர்களைத் தேடிய தனிப்படை போலீசார், ஹைதராபாத் பகுதியில் சம்சாத்பூர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 6 பேரை கைது செய்தனர். 
 

எப்படி சிக்கினார்கள்

 
கொள்ளைக்கும்பல், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் வழியாக தப்பி சென்றது தெரிய வந்துள்ளது. மேலும், ஆனேக்கல் அருகே பஸ்திபூர் என்ற இடத்தில் அவர்கள் ஓசூர் நிதி நிறுவனத்தின் மேலாளர் சீனிவாசராகவிடம் பறித்த செல்போனை, வீசிச்சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. 
 
மேலும் அங்கு கிடந்த காலி பை ஒன்றையும் தனிப்படை போலீசார் கைப்பற்றினர். தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ஒரு பையை எடுத்து அதில் நகைகளைப் போட்டு கொண்டு தப்பி சென்று உள்ளனர். 
 

GPS டிராக்கிங் சிஸ்டம் உள்ள பை

 
அந்த பை ஜி.பி.எஸ். டிராக்கிங் டிவைஸ் பொருத்தப்பட்ட பை ஆகும். இதன் மூலம் அந்த பையை கொள்ளையர்கள் எந்த பகுதிக்கு கொண்டு செல்கிறார்கள் என்று பார்த்தபோது அவர்கள் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிக்கு சென்றது தெரியவந்தது. 
 
கொள்ளையர்களை பிடிக்க தமிழக போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே அவர்களுடைய செல்போன் எண்களை வைத்து சிக்னலை ஆராய்ந்தபோது, கர்நாடகாவிலிருந்து சந்தேகத்திற்குரிய சில நபர்கள் பைகளை வைத்துக்கொண்டு ஐதராபாத் சென்றது தெரியவந்தது. 
 
கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி சக்திவேல் தலைமையிலான குழு அவர்களை பின்தொடர்ந்து ஐதராபாத்தில் 6 பேரை கைது செய்தனர். 6 பேரும் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 

 
மேற்கொண்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, காவல்துறையினருக்கு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தப்பிய கொள்ளையர்கள் - 18 மணி நேரத்தில் சிக்கியது எப்படி..? - சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்யம்..! தப்பிய கொள்ளையர்கள் - 18 மணி நேரத்தில் சிக்கியது எப்படி..? - சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்யம்..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.