பெண்கள் செக்ஸை என்ஜாய் செய்யாமல் இருக்க இது தான் காரணம் - சர்ச்சையை கிளப்பிய வித்யா பாலன்..!


திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகை வித்யா பாலன் திடீர் திடீர் என பரபரப்பைக் கிளப்புவது ரசிகர்களுக்குப் பழக்கமான ஒன்றுதான். ஆள் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்த இவர் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார் என்ற விஷயம் வெளியானதுமே இந்திய அளவில் பிரபலமானார். 
 
டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரிடப்பட்ட அந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்து. இதனால், ஒரே படத்தில் இந்தியா முழுதும் பிரபலமானார் அம்மணி. 
 
சொக்கும் விழிகளால் சுண்டி இழுக்கும் அழகை கொண்ட சில்க் ஸ்மிதாவின் சினுங்கல்கள், கவர்ச்சி சமிக்ஞைகள் என எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு படத்தில் வித்யாபாலன் அசத்தியிருப்பதாக இயக்குநர் மிலன்லுத்ரியா பலமுறை பாராட்டித் தீர்த்து விட்டார். 
 
அதனை தொடர்ந்து, காலண்டர் ஒன்றின் விளம்பரத்திற்காக உடலில் ஆடைகள் இல்லாமல், பேப்பரால் மறைத்துக் கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்தார். 
 
இந்நிலையில் கவர்ச்சிப் புயலாக உருவெடுத்துள்ளது பற்றி வித்யாபாலன் அளித்த ஒரு பேட்டியில், கவர்ச்சி காட்டுவது எப்படி என விளக்கம் கொடுத்துள்ளார். ரசிகர்களை கவரவே கவர்ச்சிக் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. 
 

 
கவர்ச்சியாக நடித்தால் அதற்காக அந்த நடிகை இயல்பாகவே அதே குணமுடையவராகத் தான் இருக்க வேண்டும் என்பது அர்த்தம் இல்லை. கவர்ச்சியும் ஒருவகை நடிப்பு தான். நமது சிறு சிறு அசைவுகள், கவர்ச்சியான கிளு கிளு காட்சிகளாக திரையில் தெரியும் என்று கூறியிருக்கிறார் வித்யாபாலன். 
 
மேலும், நான் நாற்பது வயதை கடந்த பிறகு தான் ஹாட்டாக உணர்கிறேன். பொதுவாகவே, பெண்கள் எப்போதும் வெட்கப்பட வேண்டும் என்று சொல்லி தான் வளர்க்கிறார்கள். அதனால் அவர்கள் செக்ஸை என்ஜாய் செய்வது கூட இல்லை. 
 
நான் இருபது முதல் முப்பது வயது வரை என் கனவை நோக்கி பயணித்தேன், முப்பது வயதிற்கு மேல் என்னை பற்றி தெரிந்து கொள்ளவே காலம் சென்றுவிட்டது. தற்போது, நாற்பது வயதை கடந்த பிறகு தான் நான் என வாழ்க்கையை அனுபவிக்கவே போகிறேன் என கூறியுள்ளார் வித்யா பாலன்.

பெண்கள் செக்ஸை என்ஜாய் செய்யாமல் இருக்க இது தான் காரணம் - சர்ச்சையை கிளப்பிய வித்யா பாலன்..! பெண்கள் செக்ஸை என்ஜாய் செய்யாமல் இருக்க இது தான் காரணம் - சர்ச்சையை கிளப்பிய வித்யா பாலன்..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.