சிம்புவுடன் இரவு பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா - பலரும் பார்த்திராத புகைப்படம்..!


தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் நடிகர் டி ஆர் ராஜேந்தர் மகன் தான் சிலம்பரசன். சிறுவயதிலிருந்தே சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது வரை அதில் வெற்றி நடை போட்டு வருகிறார். 
 
சிம்பு சினிமாவில் நடித்து பிரபலமானதைவிட தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானது தான் அதிகம். அந்த வகையில் முதன் முதலில் சிம்பு காதல் சர்ச்சையில் சிக்கியது திரிஷாவுடன் தான். 
 
சிம்பு மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நடித்த முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அது பெரிய அளவுக்கு வளராமல் அப்படியே அமுங்கி விட்டது. 
 
அதன்பிறகு வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு மற்றும் நயன்தாரா இருவருக்கும் காதல் வந்தது. இது வெளியில் தெரியும்படி இருவருமே பொது இடங்களில் ஒன்றாக கைகோர்த்து நடப்பதும், தனிமையில் முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப் படங்களை வெளியிடுவதும் என தங்களது காதலை தாறுமாறாக கொண்டாடி வந்தனர். 
 
 
ஆனால் அதன் பிறகு நயன்தாரா மற்றும் சிம்பு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பிறகு நயன்தாரா பிரபுதேவா, விக்னேஷ் சிவன் என தன்னுடைய லிஸ்டை அதிகரித்து கொண்டே வருகிறார். சிம்புவும் நயன்தாராவுக்கு பிறகு ஹன்சிகாவை காதலித்தார். 


 
அதுவும் கைகூடவில்லை. இந்நிலையில் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அதில் சிம்புவுடன் நயன்தாராவைப் போலவே அமலாபாலும் நெருக்கமாக உள்ளார்.

சிம்புவுடன் இரவு பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா - பலரும் பார்த்திராத புகைப்படம்..! சிம்புவுடன் இரவு பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா - பலரும் பார்த்திராத புகைப்படம்..! Reviewed by Tamizhakam on January 20, 2021 Rating: 5
Powered by Blogger.